Pages

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கேட்டிருக்கீங்களா?

கேட்டிருக்கீங்களா?
(உயர்திரு சுகி/உயர்திரு தென்கச்சி அவர்களின் உரையிலிருந்து).

சிவப்பழகு சாதனங்கள் குறித்த விளம்பரங்கள் எப்போதும் என்னை எரிச்சல் அடைய வைத்திருக்கின்றன. ஒரு மாநாட்டில்  ஒரு வெள்ளைக்காரர் பேசினாராம். நாங்கள் ஐரோப்பா முழுதும் ஒரே நிறத்தில் இருக்கிறோம். வெண்மையாக ஆளப்பிறந்தவர்கள் அதனால்தான் ஒரே நிறம், நீங்கள் கலப்பினம் அதனால் பல்வேறு நிறங்களில் இருக்கிறீர்கள், அதனால் அடிமைகளாக - என்றாராம். அந்த கூட்டத்தில் இருந்த மறைந்த நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பதில், "கழுதைகள் உலகெங்கும் ஒரே நிறம்தான். ஆனால் குதிரைகள் பல வண்ணம். நிறத்தினால் உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இதை நினைத்துக்கொள்வது நல்லது".
காக்கையை கிளி ஒன்று, கறுப்பு என கிண்டல் அடித்துக்கொண்டிருந்ததாம் கர்வமாக. அப்போது வந்த வேடன், கிளியை பிடித்துபோக - காக்கை கருப்பின் மேன்மை இதுதான் - உன் கலரில் வினையும் இருக்கிறது என்றதாம். பிடித்து சென்ற வேடனை காக்கையும் தொடர்ந்து சென்றதாம். அவன் கிளியை பேச பழக்கிகொண்டிருந்தானாம். கிளியை எப்படி பழக்குவார்கள் தெரியுமா? பூண்டை சுட்டு அதன் வாயில் வைப்பார்கள். அன்று அமாவாசையாம். வேடனின் மனைவி, கடவுளுக்கு படைத்து, "கா கா" என காகத்தை அழைத்தாளாம், சோறிட. அப்போது அந்த காகம் கிளியை பார்த்து சொன்னதாம். கலரா இருக்க உனக்கு அவன் பாஷையை கத்துகுடுக்க சூடு வைக்கிறான். கருப்பா இருக்க என் பாஷையில் என்னை கூப்பிடுகிறார்கள் பார்". வித்தியாசமான சிந்தனையாயிருந்தது. அதுசரி, வெள்ளை பணத்தைவிட கருப்பு பணம்தானே அதிகம். I thought of the other thing heard in US. A black person saying to the white, "When it is all winter, you are pale. When you go in the sun you get a tan. When it is really hot you turn red. But you call us colored. What a pity?" இதை கேட்டபோது, இந்த வண்ணப்பிரச்சினைக்கும், வர்ணப்பிரச்சினைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனத்தோன்றியது. வர்ணத்தை அடுத்து இப்போது மதம் பிடிக்க தொடங்கியிருக்கிறது ஒரு கொலையில் ஆரம்பித்து. தமிழகத்தை நிம்மதியாக விடமாட்டர்கள் போலிருக்கிறது.

தென்கச்சியார் சொன்னது. ஆச்சாரியாரிடம் பாடம் கேட்பது முடிந்தபின் அவர் ஒவ்வொருவரிடமும் அவர்கள் கற்றது குறித்து கேட்கிறார். அனைவரும் பல ஏடுகளில் எழுதியிருப்பதை படிக்க, தருமர் மட்டும் தான் கற்றுக்கொண்டது ஒரு விஷயம்தான் என்கிறார். கோபம் கொண்ட ஆச்சரியார் அவரை அறைகிறார். பின்னர் வர் ஏட்டை வாங்கி பார்க்கையில் அதி "நிதானம்தான்" தான் கற்றுக்கொண்டது என எழிதி இருப்பதை பார்த்து, அவரை அணைத்துக்கொண்டு நீ மாணாக்கன் இல்லை குரு என்கிறார். இப்போது அது - "நிதானம்" இல்லாமைதான் இம்மாச்சரியங்களுக்கு காரணம் என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக