Pages

திங்கள், 9 ஜனவரி, 2012

நக்கீரனின் தில்(லு) முல்லு

நக்கீரனின்  தில்(லு) முல்லு


எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார். 
இதுல எத்தன விஷமம் இருக்கு பாருங்க. முதல்ல எம்.ஜி.ஆர் சொன்னதாக சொல்லி, பிராமணர்கள், "குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க". பிராமணர்களில் எத்தனை ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தனியார்துறை நிர்வாகிகள் அதுவும் கண்டிப்பான தலைவர் தகுதி உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் - நக்கீரனுக்கு தெரியாதா. இது அப்பட்டமான ஜாதி வெறி தூண்டும் - செயல்.அதிலும் இப்போது, அதை சொல்லும் காரணம், பிராமணர்களை எப்படியாவது ஜெவுக்கு எதிராக திருப்ப முடியுமா என்பதன்றி வேறில்லை.
அடுத்து, மாட்டு கறி தின்னும் மனிதர்களை கேவலப்படுத்துகிறது. உணவுப்பழக்கம் எந்த மனிதனையும், கேவலமாக்காது. அடுத்து மீண்டும், மாட்டுக்கறி கேவலம், அதை பிராமினாக இருந்துகொண்டு ஜெ
சாப்பிடுவது கேவலம் என்று தொனி வர.. அதை ஜெ பெருமையாக சொல்வதாக .. எழுதி இருக்கிறது. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதும் கீழ் தரமான நிலை நக்கீரனுக்கு எதற்கு. அதற்காக.. அவர்களுக்கு எதிரான ஜெ தொண்டர்களின் ரவுடித்தனமும் சரியல்ல.


 

ஒரு கதை ஒரு கருத்து

ஒரு  கதை  ஒரு  கருத்து  

முதலில் கதை 

இதுல வர விஷயம் - அந்த ஓட்டுனர் சொன்னது தப்பே இல்லை. நமக்கெல்லாம் தெரியும், எல்லா தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று. ஆனால் அதை கொல்வதை நாம் தவறாக நினைப்பதில்லை. ஏனெனில் அது நம் உணவு.. அதைதான் பெரியோர்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கின்றனர். உணவுக்காக கொல்வது
 பாவமில்லை. ஆனால் கொல்வதற்காக கொல்வது பாவம்.

ஒரு கோடி - சுரண்டல்

ஒரு கோடி - சுரண்டல்