Pages

வியாழன், 21 ஜூலை, 2011

இதுதாண்டா தீர்ப்பு.

இதுதாண்டா தீர்ப்பு.

உச்ச  நீதி மன்றம் அளித்துள்ள வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. ஜெ, சோ போன்றோரின்..  தான் நினைத்ததே சரி.. என்ற வர்க்க அகம்பாவத்திற்கு சாட்டை அடி.  
இதில் மிகவும் பாதித்த விஷயங்கள் என்ன தெரியுமா? 
முதலாக குழந்தைகளின் இரண்டு மாத படிப்பினை வீணடித்த பெரிய தவறு. 
சில அறிவாளிகளின் அபத்தமான பேச்சுக்கள்.  ஒருவர் சொல்கிறார்.. கிராமப்புற மாணவர்களால் இதை படிக்க முடியாது என்று.  அத்தனை கேவலமா? இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் கிராமத்தில் படித்தவர்கள்தான். நான் உள்பட. சென்ற முறை இந்தியா வந்தபோது என்னுடன் பயணித்த நியுக்ளியர் விஞ்ஞானி திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராம பள்ளியில் படித்தவர்தான். முன்பிருந்த மனப்பாடம் செய்யும் பாட திட்டம்தான் கிராம மாணவர்கள் மட்டும் அல்லாது, படித்த பெற்றோரை உடைய நகர மாணவர்களுக்கும் சிரமம். புதிய பாட திட்டம் நிஜமாகவே அருமையாக வடிவமைக்க பட்டிருக்கிறது.முதலில் அவற்றை நான் இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்த்த பொது அசந்து போய்விட்டேன். அமெரிக்க பாட நூல்களைப்போன்று இருந்தது. ஆசிரியர்களுக்கும் குறிப்புகள். செயல் முறை விளக்கங்கள். இதை அமெரிக்கா வரும்வரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. நம் நாட்டில் இப்படி வராதா என் ஒரு ஏக்கம் நிச்சயம் வந்தது.இப்போது அது நிறைவேறி இருக்கிறது.இதை கேவலப்படுத்த இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? நான் நினைக்கிறேன்.. இப்படி இதற்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது புது பாடத்திட்டத்தை படிக்காமலே ஜெ சொன்னால் சரி சோ சொன்னால் சரி என் எண்ணுபவர்களாக இருக்க வேண்டும் அல்லது பழைய திட்டத்தில் பயன் அடைபவராக மெட்ரிக் பள்ளி நடத்துபவராக அல்லது அவர்களிடம் பயன் அடைபவராக இருக்க வேண்டும். அல்லது, அவர்களிடம் கையுட்டு பெற்ற அரசியல் வாதியாக இருக்க வேண்டும். அல்லது, வினவு சொல்வதுபோல் வர்ண வெறி பிடித்தவராக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது அனைத்து பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி முதல், அறிவியல் கூட வசதி வரை தந்து, படிப்பை இலவசமாக்கி ஊக்குவிக்க போட்டிகளும் பரிசுகளும் தரவேண்டும். 
ஏற்கனவே இந்தியாவில் கழிப்பறைகளைவிட செல்போன்கள் அதிகம் என்று ... கிண்டலடிக்கிறார்கள் உலகம் முழுதும். நீங்கள் லேப்டாப் தருவது இருக்கட்டும் அதற்குமுன் சுகாதார வசதியும் செயல்முறை விளக்கத்துக்கு அறிவியல் கூடங்களும் தாருங்கள். ஆசிரியர்கள் தாருங்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி தாருங்கள். 
தனியார் பள்ளி முதலைகளிடமிருந்து வாங்கிய கையூட்டையும் திருப்பி தாருங்கள். 


































புதன், 6 ஜூலை, 2011

இந்த தளத்தை பாருங்கள்

இந்த தளத்தை பாருங்கள் -

sarveswaran.serw5.com

MESSAGE FROM MASTERS

Respect


Respect is ugly, love is beautiful

Respect means looking again: re-spect. When you see somebody and you feel like looking again at the person, that’s the meaning of the word “respect”.


I would like you to think about the word respect. It does not mean honor, as it is said in all the dictionaries without exception. Respect simply means looking again, Re-Spect. When you are passing by on the road, somebody looks back again, you have caught his eye - You are somebody. Because respect gives you the idea of being somebody special, you can do anything stupid just to get the attention.

If you are given respect, it is never for you but for something else. For example, if you are a very good man, moral, the respect is for morality, not for you. If you are very rich, you are respected for your house and your car, not for you. You know too, deep down, that if the car disappears and the house is no longer yours, if you are defeated in the elections and are no longer prime minister, all the respect will disappear, because it was never for you in the first place. So you become afraid….


Respect is for something you have, not for you and what you are. Love is simply for you – whether you are rich or poor, capable of certain things or not, talented or not, it is simply for you. At least to one person you are not a stranger. Somebody has given you his or her total friendship and heart; that is fulfilling enough.


Respect is like when you are hungry and you go on reading a book on cooking. Your appetite will not be satisfied, because you need real food. You can have a thousand and one books on cooking, but that is not going to help. Love is food – and respect is a book on cooking. Everybody has been conditioned, taught from the very childhood, to become respectable: to come first in the class, to win the gold medal in the university – to do something so that you become precious.


It has been taught that only by doing something can you become precious – while you simply are! Whether you do something or not is secondary, irrelevant. So if you have become aware of it, drop it immediately. It is a dangerous poison, so don’t allow it to remain in you a single moment. Accept yourself; because whenever you want respect from others, it simply shows that you don’t respect yourself. Otherwise what is the need?




For More visit sarveswaran.serw5.com

வெள்ளி, 1 ஜூலை, 2011

இது என்ன விளையாட்டு?

இது என்ன விளையாட்டு?
தீராத விளையாட்டு பிள்ளை என்று கண்ணனை பாடி கேட்டிருப்பீர்கள். அலகிலா விளையாட்டுடையவன் என ஈசனை பாடி கேட்டிருப்பீர்கள். இது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விளையாட்டாக தெரிகிறது. அதாவது இப்போது இந்திய அரசு... காங்கிரஸ் கட்சியின் அரசு விளையாடும் விளையாட்டு. இவங்களுக்கு எதிர்ல விளையாடரவுங்க - நிறைய பேர் இருந்தாலும். ஒரு நாலு டீம்தான் - த்ரில்லிங்கா இருக்கு.
முதலில் திமுகவுடன் நடக்கும் விளையாட்டை பார்ப்போம். 
முதல் ரவுண்டு. 
இது தேர்தல் ஏற்பாடுகளுக்கு முன்னாடியே ஆரம்பித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவாதம் ஆரம்பம் ஆனவுடன் தொடங்கியது. தெரியாமல்தான் கேட்கிறேன்... நடக்கும் ஊழல்களில் பங்கு தராமல் நடக்கும் ஊழல் ஏதாவது இருக்கிறதா? சாதாரணமாக, பதிவாளர் அலுகம், வாகன உரிமம் வழங்கும் துறை... அது என்ன துறை ஆனாலும்.. அங்கு நடைபெறும் அத்தனை வஸூலும், அடிமட்ட பியூநில் இருந்து, அந்த துறை அமைச்சர் வரை அவர்களின் பதவிக்கேற்ப பகிர்ந்து கொள்ளப்படுவது இந்த ஜன நாயக நாட்டில் அனைத்து மன்னர்களும் அறிந்ததுதானே?  இதில் நிதித்  துறையில் இருந்த சிதம்பரம் பங்கும் இருக்கிறது என ஆதாரம் காட்ட சுப்பிரமணிய சாமி வேண்டுமா? இல்லை சோனியாவுக்கும் பங்கு கிடைத்திருக்கிறது அது மக்காவ் வங்கியில் இருக்கிறது என தெரிவிக்கவாவது அவர் வேண்டுமா? நிச்சயம் இந்த பணம் எல்லோராலும் பிரித்து மேயப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன்.. கலைஞரே சொன்னாரே! அத்தனை பணத்தை ஒரு ஆள் லட்ட முடியுமான்னு. சரி பங்கு எல்லாம் போயிருக்குன்னு சொன்னா.. எதுக்கு ஒரு சிலரை மட்டும் உள்ள வைக்கிறாங்க. நெஜமாவே நீதித்துறை, சிபிஐ எல்லாம் அவ்வளவு தீர்மானமா இருக்கா? அதில் எல்லாம் இந்த அழுகின தக்காளிகளின் தாக்கம் இல்லையா? இங்குதான் நமக்கு சிந்தனைக்கு வேலை. நிச்சயமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலும் தருகிறார்கள். அதே நேரம் இந்த அழுகல்களை பாதுகாக்கும் அல்லக்கைகளும் அங்கு இருக்கின்றன.நல்லவர்களிலும் - நமக்கேன் வம்பு - ரகமும் இருக்கும்.
அவைகளுக்கு இடையேயான சட்டரீதியான தற்காப்பு யுத்தம்தான் இங்கு நடப்பது.
அதற்கெல்லாம் மேலும் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதுவும் கற்பனைக்கெட்டாத விஷயமாக படவில்லை. பங்கு பிரிப்பதில் நியாயமாக நடக்கவில்லை என ஒரு பெரிய சக்தி நினைத்திருக்கிறது. அதை நிருபிக்கவும் வழி இல்லை. அதனால் ஒருவிதமான பழி வாங்கும் செயலாகவும் இதுதோன்றுகிறது. அதை எதிர்த்து கேட்க வேண்டுமானால் - ஒன்று அனைத்தையும் கொடுக்க வேண்டும் அல்லது நான் சரியாக நடந்தேன் எதற்கு என்னை தண்டிக்கிறீர்கள் என நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதை நம்பிவிட்டால் - கொஞ்சம் தண்டனை - ஆனால் அடித்தது மிஞ்சும். அதுதான் நடப்பதாக தோன்றுகிறது.
இரண்டாவது ரவுண்டு..
இது எலக்ஷன் ஆரம்பித்ததும்...
இந்த டீம் நிச்சயம் எப்படியாவது ஜெயிச்சுடும். அதனால அவங்க கூட இருக்கணும் அதிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடம் வாங்கிடனும். அதுக்கு ஏத்த மாதிரி அவங்க பேரெல்லாம் 2G இல மாட்டி இருக்கு. அத சாதகமா உபயோகப் படுத்திக்க வேணும். இப்படியெல்லாம் திட்டம் போட்டு 63 சீட்டு வாங்கிய பின்னர், தலைவரால் நாயன்மார்கள் மாதிரி எல்லாரும் இருங்க... அப்பவும் நக்கல் பாத்தீங்களா!... என சொல்லத்தான் முடிந்தது. அவங்கெல்லாம் நாயன்மாருங்க இவர் சிவபெருமான். 
இதில் இன்னொரு விதமாகவும் இருக்கலாம் என அமுதவன் எழுதி இருந்தார். 
அது..
"தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது."
அவரின் முழு கட்டுரை படிக்க...
http://amudhavan.blogspot.com/2011/05/blog-post.html 
வேடிக்கை என்னவென்றால்.. அவர்கள் நினைத்தது இரண்டுமே நடக்கவில்லை. ஜெயிக்கவும் இல்லை. திமுகவுக்கு இணையாக சீட்டுக்களை அள்ளவும் முடியவில்லை.
ராகுலுக்கு கிடைத்த ஜோக்கர்கள் அறிவுரை அப்படி.
அடுத்து என்ன நடக்கும்?
இன்னும் கொஞ்ச நாளில் சிபி ஐ - வேகத்தை குறைக்கும். ஹர்ஷத் மேத்தாவை மறந்தது போல் நாமும் இதை மறந்து விடுவோம். தியாகி ராசாவும், கனியும் பெரும் வெற்றி பெற்று.. ஸமூகத்திற்கு மறுபடியும் தொண்டு ஆற்றுவார்கள்.

இரண்டாவது விளையாட்டு.. 
இது சமூக ஆர்வலர்களுடன்... கூடிய விரைவில் விவாதிப்போம்.