Pages

வியாழன், 29 டிசம்பர், 2011

காதலுக்கு காலமில்லை.

காதலுக்கு காலமில்லை.
நிவேதிதா தமிழ்
(நாளைய இயக்குனர்களுக்கு சமர்ப்பணம்.)
மதராஸின் பிரெசிடென்சி கல்லூரி. வர்த்தக ஒலிபரப்பில் பதினாறு வயதினிலே படத்தின்  செந்தூரப்பூவே ஒலித்துக்கொண்டிருந்தது, புத்தம் புது பாடல்கள் நிகழ்ச்சியில். காலை பத்துமணி பரபரப்பில் - பெல்பாட்டம் தேய அவன் வேகமாக கல்லூரிக்குள் நுழையும்போது அவள் வந்தாள். "உங்களோட பெல்ஸ்ல பின்னாடி பாட்டத்துல ஜிப் வச்சி தச்சிருக்கிறது புத்திசாலித்தனமா தெரியுது", என்றாள். அவளின் இரட்டை சடை அவளின் பேச்சுக்கு நடனம் ஆட,வலது பக்க ஒத்தை ரோஜா அவனை சிதைத்தது. "அது சரி.. இப்படி  தெனமும் வெள்ளை ரோஜாவும் வி கட் தாவணியுமா.. என்னை படுத்தறியே! நான் பெயிலானா உங்கப்பாதான் பீஸ் கட்டணும்.". என்றான். .
" பெயிலானியானா இருக்குடா மகனே..." என இடித்தாள்  .
அட்லாண்டாவின் ஹாலிடே இன் ஹோட்டல். லெதர் ஃபேர் மற்றும் கான்ஃபிரன்சுக்காக  வந்திருந்தார்
ஐம்பதின் ஆரம்பத்தில் இருந்த ஹரி.மதிய உணவை தட்டில் ஏந்தி திரும்பியவருக்கு அதிர்ச்சி. நீங்க ... என அவர் ஆரம்பிக்கும் முன்பே அவள் "நீங்களா?" - என்றாள்.   ஒரு படித்த மேல்தர வியாபார வர்க்க சூழ்நிலை.. ஆடம்பர ஹோட்டல்.. சுற்றிலும் கனவான்கள்  .. எப்படி இருவருக்கும் மறந்தது? அவரின் கையிலிருந்த உணவுத்தட்டும் குளிர்பான கோப்பையும் நழுவின. பாய்ந்து வந்த பணியாள் - தான் அதை பார்த்துக்கொள்வதாக சொன்னதற்கு வழக்கமான "நன்றி" கூட அவருக்கு வரவில்லை. நடந்தாரா பறந்தாரா .. அவள் அவரின் இறுக்கமான பிடியில் இருந்தாள். இருவரின் அழுகை.. சூழ்நிலையை .. இறுக்கமாக்க, தெரிந்தோ தெரியாமலோ, அங்கு இழைந்துகொண்டிருந்த மெல்லிசை திடீர் என அதிகமாகி, அவர்கள் சுய நினைவு திரும்பியதும் குறைந்தது.
உணவு தட்டுடன் அவர்கள் மேசையில் அமர்ந்தபின்னும், இருவருக்கும் பேச தோன்றவில்லை. கண்ணின் ஓரங்களில் அரும்பி வழிந்த வலிகளை துடைத்தபடி இருந்தனர். முதலில் நிதானத்திற்கு வந்து பேசியது மீராதான். "எப்படிடா இருக்கே?" என்றாள்.
"இருக்கேன் மீரா.. நீ?". என்றார் ஹரி. அப்போதுதான் அவளை நன்றாக பார்க்க அவரால் முடிந்தது. நீர்த்திரை கண்ணிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தது.
மீரா நிறைய மாறி  இருந்தாள். எப்போதும் பின்னலில் இருக்கும் தலைமுடி விரிந்து தோளில் புரண்டுகொண்டிருந்தது. ஒற்றை ரோஜாவெல்லாம் இல்லை.இந்திய  உடையின்  தாக்கம் கொஞ்சமும் இல்லாத கவுன்.. அதற்கு மேல் கோட். காலில் முழங்கால் வரை ஏறிய பூட்ஸ். பொட்டில்லாத நெற்றி. அதே திமிரான பார்வை. உதட்டின் ஓரத்தில் நிரந்தரமான புன்னகை. கன்னங்களில் சிவப்பை மீறி எட்டிப்பார்க்கும் முதுமையை மறைக்கும் மஸ்காரா. கூந்தலை வருடியபடி பேசும் பேச்சு வாகு முற்றிலும் புதிதாய் இருந்தது. வாணி ஜெயராமின் குரல்
மட்டும் அப்படியே இருந்தது, இன்னும் வயதாகாமல். உடலின் வளைவுகளில் கொஞ்சம் சிவப்பு கூடி   இருந்தது .. அளவுகளில் பெரிதாக மாற்றம் இல்லை.
"தொந்தி போட்டிருக்கேடா.." என்றாள் லேசாக சிரித்தபடி.
"நீ எப்படி இன்னும் அப்படியே இருக்கே? சொல்லப்போனா.. இப்போ முன்னிய விட அழகா இருக்கே." என்றான்.
"வயசாச்சில்ல.. கண்ணு கொஞ்சம் கெட்டுப்போயிருக்கும்.. பாத்துக்க.." என்றாள்.
  "ஆமாடா .. வயசு. சே அப்படியே இருந்திருந்தா! வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு உனக்கு."
"நீ சொல்லுடா. எத்தன பசங்க"
"சித்தார்த் ஜான்ஸ் ஹோப்கின்ஸ்ல ஐந்தாம் வருஷம்.. நிவேதிதா எம் ஐ டி மூன்றாம் வருடம்.. லக்ஷ்மி போஸ்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியை..."
"வாவ்.. நமக்குள்ள நிறைய ஒத்துமை இருக்குப்பா. என்னோட பொண்ணுதான் பெரியவ. ஹார்வேர்ட்ல ஃபைனல் மெடிக்கல் படிக்கிறா. பேர் தெரியுமா ஆச்சர்யம் .. நிவேதிதா. பையன் பேர் இதைவிட ஆச்சர்யம்.. கௌதம் அவனும் அங்கேயே நாலாம் வருடம் படிக்கிறான். கண்ணன்  சிக்காகோவில ஆசிரியர்."
"பொண்டாட்டி எப்படிடா?"
"ஜெம் .. இங்க வந்து MBA முடிச்ச உடனே எங்க அம்மா புடிச்ச ஸ்ரீரங்கத்து தேவதை. என்னாலதான் அவளோட நேரம் செலவழிக்க.. எப்படி சொல்றதனு தெரியல. தேடல் .. தினமும் புதிய அனுபவம் இந்த நிறுவனத்தில் சேல்ஸ் மேனஜராக சேர்ந்ததில் இருந்து. தினம் தினம் புதிய முகங்கள் சாதனைகள். 400 மில்லியன் இவர்களின் டர்ன் ஓவர் அப்போது இன்று 8.5 பில்லியனுக்கு உயர்த்தி இருக்கிறேன்.அதிலும் இன்னொரு உள் நோக்கம் இப்படி சுத்தினால் எங்காவது உன்னை சந்திக்க மாட்டோமா என்று."
அவனை இழுத்து முத்தமிட்டாள்.
"எப்படிடா இவ்வளவு ஒத்துமையாக நினைக்கிறோம். நான் கல்யாணமான பிறகு வீட்டில்தான் இருந்தேன். அவர் பள்ளி சென்று  திரும்பி வரும் வரை நரகம். ஓட்ட முடியாத கிராமம். முதல் திருமண நாளில் கொண்டாட முடியாமல் நிவி உதைத்தாள். மறுநாள் அவள் பிறக்கும்வரை வலி. ஆறு மாதம் ஓடியது. அதன்பின் மனதின் தீராத ஒலி ஒரு  வலி. நாம் இப்படியே ஒன்றும் சாதிக்காமல் போய்விடுவோமோ என்று. இந்த MNC கம்பெனியில் சேல்ஸ் எக்செகுடிவாக சேர்ந்தேன்.இந்த ஊருக்கு வந்தபோது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, என் விசாவை சார்ந்து வந்ததால். ஆண் மனோபாவம். எனது வருமானத்தில் வாழ பிடிக்காமல், சில காலம் ரொம்ப அமைதியாக இருந்தார், பேசவே மாட்டார். அவருக்கு வேலை கிடைத்தபின் - ஒரு நிம்மதி. அதுக்கு பின் சுற்றினேன் சாதித்தேன் உன்னை மாதிரியே. அரை பில்லியன் கம்பெனியை இன்று ஆறு பில்லியன் கம்பெனியாக மாற்றி இருக்கிறேன். நீ நினைத்தது போலவே உன்னை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ..."
அவளின் கண்கள் பனிக்க வார்த்தை திக்கியது.
அவளை இழுத்து அணைக்க .. லேசான தூறல் .. வெள்ளை மழை. அவர்களின்
கான்ஃபிரன்ஸ் முழுதும் மறந்திருக்க.. அட்லாண்டாவின் வீதிகளில் நடந்துகொண்டிருந்திருந்தார்கள்.  அந்த வெள்ளை மழை அவர்களை வாழ்த்துவதாக தோன்றியது.
"ஃ பேஸ் புக், ஜிமெயில் எல்லாத்திலையும் தேடி இருக்கிறேன் தெரியுமா. ஆயிரம் ஹரி கிடைப்பார்கள்.. நீ மட்டும் கிடைக்கவே இல்லை."
"எனக்கு அது தோன்றவே இல்லை. உன்னோட வீட்டுக்காரர் எப்படி?"
"தங்கம்டா. கொஞ்சம் அம்மாஞ்சி. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போக தவற மாட்டார். நாள் கிழமை பார்ப்பதில் ரொம்ப நம்பிக்கை. இதை எல்லாம்விட நிரம்ப ஆன்மீக ஈடுபாடு. எல்லா சாமியார்களையும் பிடிக்கும். நித்யா தப்பே செய்திருக்க வாய்ப்பில்லை என்பார்."
"என் மனைவியிடமும் அந்த குணம் உண்டு. அவளுக்கும் சாமியார்களை பிடிக்கும்."
"எனக்கு இப்ப ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ஹரி. நாம ரெண்டு பேருக்கும் ஒரே எண்ணங்கள். அதாவது ஒரு காந்தத்தின் ஒரே துருவங்கள் போல. அதனால்தான் நம்மால் சேர முடியவில்லை. எதிர் துருவங்களாக இருக்கும் அவர்களுடன் இணைந்திருக்கிறோம்"
"அப்படியா நினைக்கிறாய். அப்படியானால் அவர்கள் அருகிலேயே இருக்கும்படியான வேலை தேடி இருப்போமே. நான் என்ன எண்ணுகிறேன். எண்ணையும் தண்ணீரும் போல் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்"
அவளின் கை அவன் கைகளை இன்பமாக இறுக்கியது. லேசாக தோளில் இடித்தாள்.
"உன்கிட்ட பேசி ஜெயிக்கறது..உம்.."
"திரும்பலாமா" என்றாள்.
ஹோட்டலுக்கு வந்தபோது  இரவு 10 மணி ஆகி இருந்தது.
"எனக்கு ஃபிளைட் நாளை மதியம் இரண்டு மணிக்கு. உனக்கு என்றாள்."
"எனக்கு மூன்று மணிக்கு. ஓ கே ..சாப்பிடலாமா.. இங்கு ஃ பிஷ்  அண்ட் சிப்ஸ் நல்லா இருக்கும்."
"எப்ப அதெல்லாம் சாப்பிட கத்துகிட்ட?"
"கிண்டலா?"
அவன் பார் செக்ஷனில் நுழைய அவள் விழிகள் விரிந்து புருவம் மேலேறியது.
"என்ன ...."
அவள் முடிக்கும் முன் பணியாள் வந்திருந்தாள்.
அவளின் சிரித்த முக விசாரிப்புகளுக்கு பதிலளித்து, "எனக்கு ப்ளாக் லேபில்.. டபுள் ஆண் தி ராக்ஸ்" என்றவன் "உனக்கு" என்றான் மீராவை பார்த்து. "ஸேம்.. ஹியர்" என்றாள்.
அவள் குடிப்பதை அவன் விமர்சிப்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். ஹரி அதை கண்டுகொள்ளவே இல்லை.
பக்கத்து டேபிளில் இருந்து எழுந்து போனவர்கள் விட்டு சென்றிருந்த உணவை பார்த்தான்.
"எத்தனை வீணாக்குகிறார்கள்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நேற்றுதான் கௌதம் சொன்னான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு வருடம் முழுக்க உணவளிக்க எவ்வளவு தேவை தெரியுமா?"
'என்ன ஒரு டிரில்லியன் டாலர்கள்?"
"ரொம்ப அதிகம். முப்பது மில்லியன் டாலர்கள்  போதும். என் கம்பெனியின் லாபத்தில் ஒரு சிறிய பங்கு..."
"நினைத்தால் சில சமயம்.. வெறுத்து விடுகிறது இல்லையா ஹரி.. நம் ஊரில் எத்தனை பட்டினி சாவுகள். நாம் பில்லியனில் புலம்பிக்கொண்டிருக்கிறோம்.. "
அவர்களின் பேச்சு அனைத்து தளங்களிலும் போனது.இரவு ஒரு மணிக்கு பாரை மூட வேண்டும் என பணியாள் சொன்னபோதுதான் அத்தனை நேரம் போனது அவர்களுக்கு தெரிந்தது.
எழுந்த போது ஹரி லேசாக தள்ளாடினான். மீரா கையை பிடித்து நடத்தினாள்.
பதினாலாவது மாடியில் லிஃப்ட் நின்றபோது, வாயேன் என் ரூமுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம் என்றாள் மீரா.
இரு வினாடி தடுமாறிய ஹரி .. "ஓ கே" தோள் குலுக்கினான்.
அவள் அறைக்கு சென்றதும் கட்டிலில் விழுந்தான். "ஐந்தே நிமிடம்.. ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.." என்றவள்.. குளியல் அறைக்கு போனாள்.
அவள் திரும்பிபோது.. ஹரி நன்றாக துங்கி இருந்தான். அவனது ஷூவை கழற்றிவிட்டு டையை தளர்த்தினாள்.
பாவம் இரண்டு இரவாக தூங்கவில்லை என்றான் அல்லவா.. மறந்தேவிட்டேன். அவளுக்குள்  பேசிக்கொண்டாள்.
சோஃபாவில் படுத்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். எத்தனை இரவுகள்.. இதேபோல் சோஃபாவில் .. ஆனால் இவன் இல்லை அருகில்..
காலையில் "கண்ணா.. கண்ணா.." என செல்போனின் சிணுங்கலா அல்லது அந்த மெக்சிகன் காபியின் நறுமணமா.. தெரியவில்லை.. ஹரி கண் விழித்தான். பின்..  விழித்தான். இடம் புரிய கொஞ்சம் நேரமானது..
சிரித்தபடி காபியை நீட்டினாள் மீரா.
செல்போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, காபியை வாங்கினான்.
"எழுந்தீட்டிங்களா?"
"எழுந்துட்டேன் லக்ஷ்மி.. என்ன பண்ணிண்டு இருக்கே."
"சனிக்கிழமை தானே. எழுந்து தம்பிக்கு போன் பண்ணினேன். ஆவடி சாமியார் இங்க வந்திருக்காராம்.."
"யார் அந்த புளியான்கொட்டை சாமியாரா?" என்றான்.
பெயரை கேட்டதும் மீரா புன்னகைத்தாள்.
"ஆமாங்க."
"போய் பாக்க போறியா?"
"இல்லைங்க.. போஸ்டன் வரல.. நீங்க இப்ப இருக்க அட்லாண்டாதான் வந்திருக்கார். உங்களுக்காக அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன். உங்களுக்கு மூணு மணிக்குதானே ஃபிளைட். பத்து மணிக்கு போய் பாருங்கோ.."
"வேற வேலை இல்லியா எனக்கு."
"ப்ளீஸ் .. எனக்காக. அவர் ரெண்டு தாயத்து தருவார். பசங்களுக்காக சொல்லி இருக்கேன். வாங்கிட்டு வந்துடுங்க. அவர் எப்பேர் பட்ட மகான் தெரியுமா. காலத்தையே நிறுத்த தெரிந்த மகானுங்க."
"அப்படியா  ..சரி.." என்றான்.
"ஒழுங்கா சாப்பிடுங்க.. ராத்திரிக்கு நான் ஏர்போர்ட் வரணுமா.."
"வேண்டாம்.. நானே வந்து விடுகிறேன். வச்சிடட்டுமா.."
அவன் போனை வைத்ததும், மீராவின் போன் சிணுங்கியது.
"சொல்லுங்க.
எப்படி இருக்கீங்க.." என்றாள்.
"ஓ கே.. நீ  எப்படி இருக்க மீரா. அப்புறம் ஒரு விஷயம். இன்னிக்கி உனக்கு ரெண்டு மணிக்குதானே
ஃபிளைட். சென்னையில இருந்து ஒரு சாமியார் அட்லாண்டா வந்திருக்காராம்.ரங்க ராஜன் சொன்னான். அவர் கிட்ட உனக்காக ஒன்பதரை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கோம். அவனோட பசங்களுக்கு ரெண்டு தாயத்து சொல்லி இருந்தானாம்.. நேத்து பேசறப்போ சொன்னான். எம்பசங்களுக்குன்னு நான் கேட்டதுதான் தாமதம்.. உடனே போன் பண்ணி சொல்லிட்டான். கொஞ்சம் போய் அவர பாத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு அந்த தாயத்துக்களையும் வாங்கி வந்துடுப்பா ப்ளீஸ். அவர் காலத்தையே நிறுத்த மாத்த  தெரிஞ்ச மகான்னு  ரங்கா சொல்லுராம்பா." 
ஹரி மையமாக சிரித்தான். மீராவும் அதில் கலந்து கொண்டாள்.
வழக்கம்மாக ஒவ்வொன்றுக்கும் விவாதம் செய்யும் மனைவி.. சிரித்துக்கொண்டே "சரிங்க.. அப்ப டைம் ஆயிடுச்சே.. சரி வச்சிடவா" ன்னு சொன்னது நிச்சயம் அவள் கணவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.
"இதுல கூட எவ்வளவு ஒத்துமைடா நமக்கு.." என்றாள் மீரா ஹரியிடம்.
அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியில் வந்து டாக்ஸி பிடிக்கும்போது.. மணி 8 :30 ஆகி இருந்தது.
"மீரா நீ இந்த சாமியார்களை நம்பறியா?"
" நா கோவிலுக்கு கூட போக மாட்டேன். சாமியாரா..
சான்சே இல்லப்பா."
"இன்னிக்கு 
நாம ஒரு வேலை பண்ணலாமா..நம்ம பழைய கதைய சொல்லலாம் இவர்கிட்ட...  அவர்தான் காலத்தையே நிறுத்த மாத்த தெரிஞ்ச மகானாம் இல்ல. நம்ம வாழ்க்கைய மாத்த சொல்லலாம்.." அவன் பதின்ம வயது இளைஞனாக மாறி இருந்தான்..அந்த துள்ளலில். அவளும்தான்.
மீரா சிரித்தாள்."நான் ரெடி.." என்றாள்.
அந்த கோவிலின் விசாலமான மண்டபத்தில், பெரிய சிம்மாசனம் போன்ற சேரில் புளியாங்கோட்டை சாமியார் அமர்ந்திருந்தார். அவர்  சிஷ்யகோடிகள் அவர் பேசுவது கேட்காத தொலைவில் நின்றிருந்தார்கள்.
ஆசி வாங்க சிலர் காத்திருந்தார்கள்.
இவர்களின் பெயர் சரிபார்க்கப்பட, இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
சாமியார் இவர்களை சட்டை செய்யாமல், தாயத்துக்களை தந்தார். சிறிது விபூதியும் குங்குமமும் தந்தார்.
"உங்களோட கொஞ்சம் தனியா பேசணும்", என்றான் ஹரி.  
"சொல்"
"நாங்கள் இருவரும் அந்த காலத்தில்.."
"தெரியும் அதற்கு இப்போது என்ன?"
"நாங்கள் இணைந்து வாழ ஆசைப்படுகிறோம்."
"உங்களின் இணைகளிடம் போய் சொல்லுங்கள்.." அவரின் குரலில் லேசான கடுமை இருந்தது..
"இல்லை.. எங்களின் அந்த கால வாழ்வுக்கு போக விரும்புகிறோம். நீங்கள் காலத்தை வென்றவர் என்று.."
அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டார்.
"இது தவறான முடிவு. நிச்சயம் இது உங்களுக்கு தேவையா?", என்றார். வயதுக்கு ஏற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும்.
"இல்லை .. நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டோம்.." என்றாள் மீரா..அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
"என்னமோ .. சாமியவே நம்ப மாட்டேன்னு சொன்ன. இப்ப கண்ணு கலங்குது.." என சாமியார் சொல்ல..அவளுக்கு அவளின் செய்கை வெட்கமாயிருந்ததுடன்.. நான் சொன்னது இவருக்கு எப்படி .. எண்ணிக்கொண்டாள்.
"சரி உங்கள் விதி ", என்றார்.
இருவரும் அவரை விட்டு விலகி வர.... ஒரு இனம்தெரியாத பரவச..நிலைக்கு இருவரும் செல்வதாக உணர்ந்தார்கள். கோவிலை விட்டு வந்தார்களா? இல்லை.. என்னவானது..
சென்னையின்  பிரெசிடென்சி கல்லூரி. எஃப் எம்  இல் கொலைவெறியுடன் தனுஷ் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, காலை பத்துமணி பரபரப்பில் - பெல்பாட்டம் தேய அவன் வேகமாக கல்லூரிக்குள் நுழையும்போது அவள் வந்தாள். அவளின் இரட்டை சடை அவளின் பேச்சுக்கு நடனம் ஆட,வலது பக்க ஒத்தை ரோஜா அவனை சிதைத்தது. காவல் காரன் நிறுத்தி ID கார்டு எங்கே என்றான். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை...ஒரு குழப்ப சூழல் சுழல்!
பிரின்சிபால் கார் அருகில் வந்து நிற்க .."என்ன பிரச்சினை" என்றார்.
"சார்.. கோமாளித்தனமா டிரஸ் பண்ணிக்கிட்டு இந்த ரெண்டு பேரும் கலாட்டா பண்றாங்க சார். என்னமோ பி யு சி படிக்கிறேன்னு சொல்ல்லுதுங்க சார்.. ஐ டி கார்டு கேட்டா.. செல்லாத நாலணாவ தராங்க சார்.."
"ஏய் யார் நீங்க.."
"சார் நாங்க இந்த காலேஜ் .. பிரின்சிபால்.. நீராஜ் "
"வாட்ச்மேன்.. பழைய பிரின்சிபால் ஒருத்தர் பேர சொல்றாங்க. இந்த அம்பது ரூபாய  கொடுத்து.. கீழ்பாக்கத்துக்கு வழி சொல்லி அனுப்பு.. மெண்டல் ஆஸ்பிடலுக்கு.." என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
"இங்க பாருங்கப்பு.. பாத்தா பாவமா இருக்கு. இந்த வயசில இப்படி ஆயிருக்க வேணாம். நீங்க ஒன்னு பண்ணுங்க.. இந்த அம்பது ரூபாய புடிங்க. 24C புடிச்சீங்கன்னா ஆவடி போலாம். அங்க புளியான்கொட்டை சாமியார் ஆசிரமம்னு கேளுங்க.அவர் உங்கள காப்பாத்துவார்..சரியா.." அவர் அடுத்த வேலை யை பார்க்க...
இருவரும்.. யோசிக்க ஆரம்பித்து இருந்தனர்.
*****************************
என்னங்க சாமியார் மறந்து போச்சா.. இங்க பாருங்க.  http://nivedita-thamil.blogspot.com/2010/01/blog-post_7482.html
(contact thamil@gmail.com, if you need help)













 









செவ்வாய், 20 டிசம்பர், 2011

சசி சகி சனி - சோ ஸ்வீட்

சசி சகி சதி சனி - சோ ஸ்வீட்
இது சும்னான்காட்டியுமா இல்ல மெய்யாலுமேவா? இதுதான் ஒவ்வொருவரின் மனதிலும். உடனே தெரிய வழியே இல்லை. சனிப்பெயர்ச்சிக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லிவிட முடியாது. யாராவது ஜோசியக்காரர் சொல்லியதாலும் இருக்கலாம். இல்லை சோவினாலும் இருக்கலாம். 
முதலில் விகடனில் ஒரு முன்னோட்டம். பின்னர் முழுக்கதை வருகிறது. இதை பார்த்தால் பெங்களுரு கேஸ் ஒரு கட்டத்திற்கு வந்திருப்பது தெரிகிறது. அதிலிருந்து மீண்டு வர ஏதோ திட்டம் என்பதாகவும் தெரிகிறது. 
ஏதோ சகிக்கு தெரியாமல் சசி சதி செய்வதாக சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இவங்க ஒரு மாநில முதல் அமைச்சர். அவங்களுக்கு தெரியாம ஒருத்தர் அவங்கள முப்பது சரி விடுங்க இருபது வருஷமா ஏமாத்தராங்கன்னு சொல்றது - கேஷ்வரகுல நே வடியற கதையால்ல இருக்கு. 
தினமலர் விடுற கதை எல்லாம் இதே ரா(ர)கத்துல இருக்கு. ஏதோ ஒரு வாயில வச்சா சப்பக்கூட தெரியாத குழந்தை அந்த சகி மாதிரியும்.. பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணாத சசி அந்த குழந்தைய ஏமாத்திட்டு இருந்த மாதிரியும் எழுதறிங்களே - இந்த மக்கள் மேல அவ்வளவு நம்பிக்கையா. இதையெல்லாம் நம்புவாங்கன்னு. 
சில விஷயங்கள் ரொம்ப கவனிக்க வேண்டி இருக்கு.
வினவு எழுதி இருக்க மாதிரி, அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற உறவு .. சாதாரண நட்போ இல்ல சகோதர பாசமோ அல்ல. அது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.
இருவரும் சேர்ந்து நடத்திவரும் அவற்றை ஒரு வாரத்தில் நசுக்கி விட முடியாது.
ஒருபக்கம் நடந்த பெரிய விஷயம் இன்னொரு பக்கத்திற்கு தெரியாது மறைக்கப் பட்டதுதான் பிரச்சினை என்றால்.. அது ஒரு காயம் ஏற்படுத்தி இருக்கும்தான். ஆனால் அது வடுவாக மாற வாய்ப்பில்லை. ஆயிரம் விஷயங்களில் ஒன்றுதானே மறைக்கப் பட்டது. நன்றாக நடந்து கொண்டிருக்கும் மீதி 999 விஷயங்கள்?
இன்னொரு விஷயம். வழக்கம் போல், இந்த வெளியேற்றத்திற்கும்  சகி எந்த காரணமும் சொல்ல வில்லை. சசியும் எந்த விளக்கமும் தரவில்லை. நடராஜனும் வாயை திறக்கவில்லை.அவங்க கட்சி மற்ற கட்சி தலைகள் எதுவும் வாயே திறக்கவில்லை.
இவங்க எல்லோரும் பேசட்டும்.
பெங்களுரு வழக்கு முடிய வேண்டும்.
இன்னும் ஒரு வருடமாவது ஆகட்டும் ... அப்பால பாக்கலாம்.