Pages

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சசி சகி சனி - சோ ஸ்வீட்

சசி சகி சதி சனி - சோ ஸ்வீட்
இது சும்னான்காட்டியுமா இல்ல மெய்யாலுமேவா? இதுதான் ஒவ்வொருவரின் மனதிலும். உடனே தெரிய வழியே இல்லை. சனிப்பெயர்ச்சிக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லிவிட முடியாது. யாராவது ஜோசியக்காரர் சொல்லியதாலும் இருக்கலாம். இல்லை சோவினாலும் இருக்கலாம். 
முதலில் விகடனில் ஒரு முன்னோட்டம். பின்னர் முழுக்கதை வருகிறது. இதை பார்த்தால் பெங்களுரு கேஸ் ஒரு கட்டத்திற்கு வந்திருப்பது தெரிகிறது. அதிலிருந்து மீண்டு வர ஏதோ திட்டம் என்பதாகவும் தெரிகிறது. 
ஏதோ சகிக்கு தெரியாமல் சசி சதி செய்வதாக சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இவங்க ஒரு மாநில முதல் அமைச்சர். அவங்களுக்கு தெரியாம ஒருத்தர் அவங்கள முப்பது சரி விடுங்க இருபது வருஷமா ஏமாத்தராங்கன்னு சொல்றது - கேஷ்வரகுல நே வடியற கதையால்ல இருக்கு. 
தினமலர் விடுற கதை எல்லாம் இதே ரா(ர)கத்துல இருக்கு. ஏதோ ஒரு வாயில வச்சா சப்பக்கூட தெரியாத குழந்தை அந்த சகி மாதிரியும்.. பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணாத சசி அந்த குழந்தைய ஏமாத்திட்டு இருந்த மாதிரியும் எழுதறிங்களே - இந்த மக்கள் மேல அவ்வளவு நம்பிக்கையா. இதையெல்லாம் நம்புவாங்கன்னு. 
சில விஷயங்கள் ரொம்ப கவனிக்க வேண்டி இருக்கு.
வினவு எழுதி இருக்க மாதிரி, அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற உறவு .. சாதாரண நட்போ இல்ல சகோதர பாசமோ அல்ல. அது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.
இருவரும் சேர்ந்து நடத்திவரும் அவற்றை ஒரு வாரத்தில் நசுக்கி விட முடியாது.
ஒருபக்கம் நடந்த பெரிய விஷயம் இன்னொரு பக்கத்திற்கு தெரியாது மறைக்கப் பட்டதுதான் பிரச்சினை என்றால்.. அது ஒரு காயம் ஏற்படுத்தி இருக்கும்தான். ஆனால் அது வடுவாக மாற வாய்ப்பில்லை. ஆயிரம் விஷயங்களில் ஒன்றுதானே மறைக்கப் பட்டது. நன்றாக நடந்து கொண்டிருக்கும் மீதி 999 விஷயங்கள்?
இன்னொரு விஷயம். வழக்கம் போல், இந்த வெளியேற்றத்திற்கும்  சகி எந்த காரணமும் சொல்ல வில்லை. சசியும் எந்த விளக்கமும் தரவில்லை. நடராஜனும் வாயை திறக்கவில்லை.அவங்க கட்சி மற்ற கட்சி தலைகள் எதுவும் வாயே திறக்கவில்லை.
இவங்க எல்லோரும் பேசட்டும்.
பெங்களுரு வழக்கு முடிய வேண்டும்.
இன்னும் ஒரு வருடமாவது ஆகட்டும் ... அப்பால பாக்கலாம்.






 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக