Pages

செவ்வாய், 16 ஜூலை, 2013

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

ஆங்கிலத்தில் என் பிள்ளைகள் பேசுகிறார்கள் எனச்சொல்லும்போது அந்த பெற்றோர்களிடம் காணக்கிடைத்த பெருமிதமும், குழந்தைகளை தமிழில் பேசினால் வதைக்கும் பெற்றோரையும், பள்ளிகளையும் கண்டு / கேள்விப்பட்டபோது, இவர்கள் எத்தனை கீழ்த்தரமாக சிந்திக்கிறார்கள் என்று நிஜமாக வேதனைப்பட்டேன். உண்மையான அறிவுக்கும், திறமைக்கும்  ஆங்கிலம் பேசும் திறமைக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை பெரிய ஆளுமைகள் இருந்த நம் நாட்டில், இப்படி ஒரு படித்த வர்க்கமா? நான் படிக்கவில்லை என சொன்னவர்களை கூட மன்னிக்கலாம். என் தந்தையோடு உயர்தர உணவகங்களில், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களிடம், நான் ஆங்கிலத்தில் பேசவில்லையானால், என் அப்பா முறைப்பார் என சொன்னதே ஒரு சின்ன பெண். அப்போது கூட அந்த தகப்பன் முறைத்தார். அந்த அறிவிலியை நினைத்துதான் வேதனை.  
இரு நிகழ்ச்சிகள் - நமது நாட்டின் ஆளுமைகள் - அவர்கள் வாழ்வில் நடந்தவை ஞாபகம் வருகிறது.
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல்வராக இருக்க வேண்டுமென நேரு வற்புறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டவர். ஒருமுறை அவருக்கு அவருடைய "Opinion" கேட்டு தில்லியில் இருந்து கடிதம் வந்ததாம். அவரும் பதில் எழுதினார். தனது உதவியாளரான அதிகாரியிடம் தந்தார். சிறிது நேரம் ஆனது. அந்த அதிகாரி வந்தார். கடிதத்தை நீட்டினார். அய்யா தங்கள் ஒப்பம் வேண்டும் என்றார்.ஓமந்தூரார் எதற்கு என்றார். இல்லை நீங்கள் எழுதிய கடிதத்தில் "Opinion", ஸ்பெல்லிங்க் தவறாக இருந்தது, அதனால் திரும்ப திருத்தி எழிதி இருக்கிறேன் என்றார். ஓமந்தூரார் கேட்டார், "அவர்கள் உன் ஒபினியன் கேட்டார்களா என் ஒபீனியன் கேட்டார்களா?" என்று.
அடுத்து அவர் சொன்னதுதான் உச்சபட்சமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். "அவர்கள் எனக்கு என்ன தெரியாது என்றும் தெரிந்து கொள்ள் வேண்டும். நான் நானாக இருக்கவே வேண்டும். நான் அல்லாதது நானாக காட்டிக்கொள்ள கூடாது", என்றார். பொய்யான வெளிக்காட்டல் நன்மைகளைவிட தீமையே அதிகம் தரும்.
இரண்டாவது, மஹாத்மா காந்தி, ஒருவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அவர் படித்த (முட்டாள்!) ஆங்கில விற்பன்னர். கடிதத்தின் சாரத்தை புரிந்து கொள்ளாத அவர், அந்த கடிதத்தில் இருந்த இலக்கண மற்றும் வார்த்தை பிழைகளை அடிக்கோடிட்டு திருந்தி, காந்திக்கு திருப்பி அனுப்பினார். காந்தி என்ன செய்தார் தெரியுமா? "உங்களின் இலக்கண திறமை மெச்சுகிறேன். என்னிடம் உதவியாளராக வேலைக்கு சேர முடியுமா?" என்று கேட்டு பதில் எழுதினார். 
இவர்களின் ஆளுமையை உங்களின் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். 
இவை எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், பிள்ளைகளின் கையெழுத்து சரியில்லை என மார்க் குறைக்கும் மட ஆசிரியர்கள். மக்களை  அடிமை குமாஸ்தா வேலைக்கு தயாரிக்க சொன்ன வெள்ளையனும் போய்விட்டான், கையில் எழுதி கோப்பில் கோர்த்துவைக்கும் வழமையும் காலாவதியாகிவிட்டது முண்டங்களா.









2 கருத்துகள்:

  1. Yes this culture is only seen in tamil nadu only.I dont know what make this tamil people to be like this.I ve never seen a tv announcer speaking a sentence without mixing english.Our pepple are proud of speaking english.I will mention one incident when I visited a house in canada and grandfather was playing with his grandchild.The grandfather was not educated much.At one stage the palying grand child grandchild told the grandfather " Fuck you" The grand father was very happy and proudly saying to me see my grandson is speaking english.It is regrettable to note that still the european slavery attitude prevails among the indian community.

    பதிலளிநீக்கு
  2. மக்களை அடிமை குமாஸ்தா வேலைக்கு தயாரிக்க சொன்ன வெள்ளையனும் போய்விட்டான், கையில் எழுதி கோப்பில் கோர்த்துவைக்கும் வழமையும் காலாவதியாகிவிட்டது முண்டங்களா.

    .........என்ன அருமையான வார்த்தைகள் அப்படியே அசந்துவிட்டேன் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு