உயர்நீதியா இது? இந்த வழக்கில் சொல்லி இருக்கும் தீர்ப்பு எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதை ஒட்டிய விளக்கம் சொதப்பலாக இருக்கிறது. ஐந்து வருடம் வாழ்ந்து, இரு குழந்தைகள் பெற்று, அவர்கள் பிறப்பிற்கு இருவரும் கையொப்பம் இட்டு, பின்னர், உன்னை மணம் புரியவில்லை என்பது சுத்தமான அயோக்கியத்தனம். இதற்கு மதச்சாயம் பூசி, அவர்கள் விபச்சாரம் செய்தவர்கள் என்பதும், சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்கள் இருவருமே அந்த மார்கத்தை முழுதும் அல்லது ஓரளவாவது,அறிந்தவர்களா என்பதே கேள்விக்குறி, ஆனால் அந்த மதத்தில் பிறந்திருக்கலாம். அந்த மார்கம் காட்டிய வழி சிறிதாவது அறிந்தவர்களாக இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டர்கள். அவர்களின் படிப்பறிவும் பட்டறிவும் கேள்விக்குறியே. இவை குறித்து எந்த ஊடகமாவது எழுதி இருக்கிறதா? நான் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் இது சரியான தீர்ப்பு.
ஆனால் இதை ஒட்டிய நீதிபதியின் கருத்துக்கள் எனக்கு ஒப்பவில்லை.
ஹிந்து பத்திரிகையில் இப்படி இருக்கிறது.
"The court said marriage formalities as per various religious customs such as the tying of a mangalsutra, the exchange of garlands and rings or the registering of a marriage were only to comply with religious customs for the satisfaction of society."
இவர் சட்டம் படித்த நீதிபதி. வக்கீல் அல்ல - சட்டம் தெரியாவிட்டால் பரவாயில்லை என்று சொல்ல. திருமணத்தை பதிவு செய்வதே சமூகத்தை திருப்திபடுத்த என்கிறாறே? நம்பிக்கைகளை மதிப்பவரானால்... சம்பிரதாயம் அல்லது மத முறைமையை மதித்து நடந்தால் திருமணம் என சொல்லலாம். அதை நம்பாதவர்கள் என்று சொல்வோருக்கு, சட்டப்படி பதிவு செய்ய சொல்லலாம். இவர் நாட்டமை மாதிரி ரெண்டு புள்ளைக்கி தலா ஐநூறு, உனக்கு ஐநூறுன்னு தீர்ப்பு சொன்னா எப்படி? இது குறித்து மற்ற விவரங்கள் என் கண்ணுக்கு கிட்டவே இல்லை.. அதாவது, சொத்தில் பங்கு போன்றவை. இதையும் சொல்ல வேண்டும், கடைசியில் தெளிவாக சட்ட விதியை சுட்டிகாட்டி இருக்கிறார் ‘live birth report’ அப்படி இருக்கும்போது, இந்த வரி எதற்கு?
அடுத்து வருவது உச்ச காமெடி
The court further said if necessary either party to a relationship could approach a Family Court for a declaration of marital status by supplying documentary proof for a sexual relationship. Once such a declaration was obtained, a woman could establish herself as the man’s wife in government records. “Legal rights applicable to normal wedded couples will also be applicable to couples who have had sexual relationships which are established."
உடலுறவுக்கு டாகுமெண்டரி அத்தாட்சி வேண்டுமாம்? எப்படி ஐயா? மோனிகா லெவின்ஸ்கி தந்த மாதிரியா? தற்போதைய டேடிங்க் கலாசாரத்தினை பயன்படுத்தி ஒரு பெண்ணோ அல்லது ஆணோ... ஒரு செல்போன் உதவியில் உங்கள் கோர்ட்டை நாடினால்? என்ன செய்வீர்கள்?
இப்படி எல்லாம் கேள்வி வரும் என அரை குறையாய் யோசித்து அடுத்த வரி...
The court also said if after having a sexual relationship, the couple decided to separate due to difference of opinion, the ‘husband’ could not marry without getting a decree of divorce from the ‘wife’.
இதில் இருவரும் சம்மதிக்கும் பட்சத்தில், விவாகரத்து வாங்காமல், கணவனும், மனைவியும் பிரியலாமாம், எத்தனை நிமிஷம் கழிச்சின்னு சொல்லலை. இருவரும் சம்மதிக்க பண பரிமாற்றம் இருக்கலாமான்னும் சொல்லலை. இனி வரும் விபச்சார வழக்குகளை எப்படி விசாரிப்பீர்கள்? இது விபரீதத்துக்கு வழி வகுக்காதா ஐயா?
இந்த கடை பத்தி மட்டும் , மேலே கண்ட அபத்தங்கள் இல்லாமல் இது மட்டும், இந்த வழக்கில் சொல்லப்பட்டிருந்தால், பல வாக்கு வாதங்கள் தேவையே இல்லை.
For solemnising a wedding, legal aspects should be placed on a higher scale than the customary aspects. In this case, the man had signed in the ‘live birth report’ of his second child and given his consent for a Caesarean section for its birth. As such, he had officially admitted that she was his wife. “Without legal encumbrance or third party interference or without affecting third party rights, both the petitioner and the respondent lived together as spouses and begot two children.” Therefore, the question of an illegitimate relationship did not arise. Wedding solemnisation was only a customary right, but not a mandatory one.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக