Pages

ஞாயிறு, 22 ஜூன், 2014

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம்

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம் 

இரு வார இலக்கிய பெண்ணிய ஜெமோ கருத்தது போராட்டங்கள் விறுவிறுப்பாக இருந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாக நான் நினைப்பது, உலகம் முழுதும் இருக்கும் ஆண் அதிக்க மனோபாவம். உலகம் முழுக்க சுற்றி வந்தவன் எனும் முறையில், உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று உள்ளது. 
எங்கெல்லாம் ஆழ்ந்த மத நம்பிக்கைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் நிலை ஆண்களைவிட தாழ்ந்துதான் இருக்கிறது. இதில் இந்து, கிருத்தவ, இஸ்லாமிய, பௌத்த இன்னும் இருக்கும் அத்தனை மதங்களும் அடக்கம். 
மதத்தை தூக்கி எறிந்த சைனாவில் பெண்களின் முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கிறது. ஆயினும் அங்கும் எந்த பிரதேசங்களில் மதம் தனது நாக்கை நீட்டி வைத்திருக்கிறதோ அந்த இடங்களில் பெண்கள் அடங்கி இருக்கிறார்கள். இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த குடும்பங்களில் என புரிந்துகொள்வது தவறு. அந்த பிரதேசத்தில். 
பெண்களின் உடை ஒருவனை காமம் கொள்ள செய்யும்.. சரிதான் அவன் அது மாதிரி அவன் தாயும் தமக்கையும் உடுத்தி பார்த்திராமல் இருந்தால், அவன் அருகிலிருக்கும்  அனைவரும் அப்படி உடை உடுத்தி இருந்தால். 
சவூதி இளைஞர்கள் இத்தாலி கடற்கரையில் இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு ஓடினார்கள்... பெண்களை இரு துண்டு உடையில் பார்க்க. இங்கு பதின்ம வயது குழந்தைகள் (அமெரிக்காவில்) உடை பற்றியோ பெண் ஆண் பேதம் பற்றியோ கவலையின்றி திரிகிறார்கள். 
தாய்லாந்து சென்ற ஒரு பெரிய புக்கர் பரிசு "குறி" வைத்து எழுதும் எழுத்தாளர் அங்கு பெண்களின் உடை குறித்து புலம்பினார். வெங்காயம் - வெற்று சதை. 
இந்த மதத்தை மட்டும் தூக்கி எறிந்தால், மனசாட்சிக்கு மட்டும் கட்டு பட்டால் ... மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்தலாம்.






  



ஞாயிறு, 15 ஜூன், 2014

அன்புடன் ஒரு அப்பா!

அப்பாவிற்கான நாள்!
1990க்கு பிறகு பிறந்தவர்களை டிஜிடல் உலக குழந்தைகள், Digital Natives (DN) என்கிறார்கள். 80களில் அல்லது அதற்கு முன் பிறந்தவர்களை Digital Immigrants (DI)- டிஜிடல் உலக குடியேறிகள் என்கிறார்கள். அப்படியானால் இந்த DI களீன் பெற்றோர்? தொழிற்புரட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அவர்களுடன் வறுமையும் குடியிருந்தது. ஆனாலும் சமூகத்தின் ஒரளவு மேம்பட்ட அந்தஸ்தில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகளை இந்த டிஜிடல் உலகத்திற்குள், குடியேற்ற முடிந்தது. உண்மையில், தமிழகத்தில் 70 சதத்திற்கும் மேலான மக்கள், இன்னும் அதே 60 70 80 களின் தரத்தில்தான் வாழ்க்கையை உருட்டுகிறார்கள். பிரபஞ்சன் முதல் எத்தனையோ அறிவு ஜீவிகள், குடும்ப அமைப்பிற்கு எதிராக கொடி பிடித்திருந்தாலும், குடும்ப அமைப்பில், தந்தையாக இருப்பதும், மகனாக இருந்ததும் எத்தனை சுகமான அனுபவம். மேலை நாட்டில் உருவாக்கப்பட்ட தந்தையர் தினம் தாயார் தினம் போன்றவற்றின் தேவை இப்போது, இந்தியாவிற்கும் தேவைப்படுவது வருத்தமான விஷயம். அதுவும், இந்த DN வகையறாக்கள் அதிகமாக, இந்தகு நாட்களின் அவசியமும் அதிகமாகிறது. முதலில் பரிசாக வாங்கிய வெப்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரியை எத்தனை முறை என் அப்பா தடவிப்பார்த்துக்கொண்டிருந்தார்!
என் தலை முறைக்கு பெற்றோராக இருந்தது அவர்களுக்கும் என்னைப்போலவே சிரமமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
என் குழந்தைகளை வளர்க்க வழிகாட்ட, நான் படும் வாதைகள், அவர்களும் பட்டிருப்பார்கள்தானே. இந்த கால குழந்தைகள் விவரம் அறிந்தவர்களாக வளர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் எனது வாதை குறைவு என்றே நினைக்கிறேன். 
தந்தையால் காயம் பட்ட மகன்களும், மகன்களால் காயம்பட்ட தந்தைகளும் ஏராளம் இருக்கலாம். முன்னவர்கள், தாங்கள் தந்தையாகும் போதும், பின்னவர்கள் தாத்தாவாகும் போதும், அந்த காயங்கள் ஆறும். சிலருக்கு தழும்புகள் மிஞ்சலாம். 
தந்தை என் நினைவுகளுடன் வாழ, இன்னும் தந்தை எனும் பொறுப்பில் போகவேண்டிய தூரம் நிறைய இருப்பதாக படுகிறது.
அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் ஒரு அப்பா!

புதன், 1 ஜனவரி, 2014

பறக்கும் டிராகன் - யானைக்கு நிச்சயம் பெரிய சவால்.

பறக்கும் டிராகன் - யானைக்கு   நிச்சயம் பெரிய சவால்.

சைனாவின் .வளர்ச்சி வேகம்



டிராகன் சைனாவின் .வளர்ச்சி வேகம் பிரமிக்க வைக்கிறது. மேலே உள்ள படத்தில் 1, 2, 3 என்று குறித்துள்ள கட்டிடங்களை பாருங்கள். இது ஷாங்காய் . சைனாவின் மும்பாய்.  2008 மே மாதம் முதல் முறை சென்றபோது, கட்டிடம் 1 முடியும் நிலையில் இருந்தது. 2009 செப்டம்பர் மாதம் அங்கு சென்றோம். கட்டிடத்தின் 87 வது தளத்தில் ஹோட்டலின் பார் இருக்கிறது. அதற்கு தனி எலிவேட்டர். முதல் தளத்தில் ஏறி 87 ஐ அழுத்தியவுடன், ராக்கெட் வேகத்தில் 30 வினாடிகளில் 87வது தளத்தில் இருந்தோம். காது அடைத்தது. அந்த லிப்டில் முதல் தளத்திற்கு பிறகு 87வது தளத்தின் பொத்தான் தான். மற்ற தளங்களுக்கு வேறு லிப்ட்கள் இருக்கின்றன. கொஞ்சம் பியர் கொறிக்க வாசாபி. வாசாபி பற்றி சொல்லவேண்டும். வறுத்து மசாலா தூவிய சில வாசாபிகளை (பொறித்த பச்சை பட்டாணி போல் இருக்கிறது) வாயில் அடக்கி, வாயை மூடி மென்றால், உச்சந்தலையில் கிறுகிறுக்கிறது. கண்ணில் நீர். பிறகு வாருங்கள் சார் என - பாரை ஒட்டி இருக்கும் பால்கனிக்கு அழைத்து சென்றார் மிங் (GM). ஒரு லேசான ஆட்டம். காற்றின் வேகத்திற்கு ஏற்ப.  ஒரு இனிய அனுபவம்.
ஒரு மாதம் முன், நவம்பரில் இரண்டு வாரம் அங்கு திரும்ப சென்றிருந்தேன். இந்த முறை, 2 என குறியிட்டிருக்கும் ஹோட்டலுக்கு சென்றோம். அதே போல ஒரு அனுபவம். ஒரு வித்தியாசம். இந்த கட்டிடத்தில், 97 வது மாடியில் இருக்கிறது, ஹோட்டலின் பார். முதல் தளத்தில் இருந்து 97 வது தளத்திற்கு விர்ர்ர்ர். 

எனக்கு பிடித்த "Duval" - (Devil in English) - Belgium Beer. வஹாபி நட்ஸ். 97 வது மாடியிலிருந்து.

மூன்றவது கட்டிடம் முடியும் நிலையில் இருக்கிறது. சார் அடுத்த முறை நீங்கள் வரும்போது அது முடிந்திருக்கும். 117 வது தளத்தில் கிரிஸ்டல் வாட்டர் (தெரியுமா!)  கு(அ)டிக்கலாம் என்றார். 
2009ல் 30மில்லியனாக இருந்த Turnover இப்போது, 4 வருடங்களில், 70 மில்லியன். வளர்ச்சியின் வேகம் பாருங்கள். 25 முதல் 30 சதம் வருடத்திற்கு - எங்கள் நிறுவனத்தில்.
சைனாவின் மொத்த வளர்ச்சி வீதம், 7.8 என விக்கிபீடியா சொன்னாலும் அது உண்மை என ஒப்புக்கொள்ள அங்கிருக்கும் படித்த அதிகார வர்க்கமே தயாராகயில்லை. கட்டுக்கோப்பான அதி ரகசியமான அந்த விகிதம் 15 சதம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

1995 இல் மேலே உள்ள படத்தில் இருக்கும் கட்டிடம்தான் ஷாங்காயின் பெரிய கட்டிடமாக இருந்ததாம். டிவி ஒளிபரப்பு நிலையம். இதில் மேலே இருக்கும் குளோபில்தான் உலகின் உயரமான கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையம் இருக்கிறது.  ஆற்றின் ஒருகரையில் இருந்து மறு கரையில் இருக்கும் கட்டிடத்தை படமெடுத்தேன். இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல மட்டும் 7 சுரங்க பாதைகள் - நான்கு lane உள்ள வாகனங்கள் அனைத்தும் செல்லும் வகையில். Amazing.

அவர்கள் மற்றவர்களை பார்த்து நிறை கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததை, சொல்லிக்கொடுக்க அவர்கள் தயாராக இருந்தும் கேட்பார் இல்லை - நாம் உட்பட. 2008ல் நான் சென்றபோது, அலுவலக நிர்வாக கூட்டங்களில், ஆங்கிலத்தில் பேசுவது அவர்களுக்கு மிக கடினமாயிருந்தது. அவர்களுக்குள் 2 மணி நேரம் பேசினாலும், ஒரே ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் இருக்காது. FM ரேடியோக்கள் அனைத்திலும், மாண்டரின் மட்டுமே. சில ஷங்கன் மொழியும் இருக்கும். இதுவரை இந்திய IT  தொழிலில் மிகம் பெரும் சாதனைகளை இந்தியர்கள் செய்துவருவதை, அவர்கள் உன்னிப்பாக கவனித்ததின் விளைவு - இப்போது அவர்களும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளனர். இந்தமுறை நான் சென்றபோது, அலுவலகத்தில் மட்டும் அல்ல, ஹோட்டலில் வேலை செய்பவர்களும் அருமையாக ஆங்கிலம் பேசினர். FM  நிலையங்கள், மூன்று பாடல்கள் ஒலிபரப்பினால் அதில் ஒன்று ஆங்கில பாடலாக இருக்கிறது. அனைத்து சேனல்களும், 5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆங்கிலம் பேசுகிறது. வேண்டுமானால் பாருங்கள், இந்தியாவின் மென்பொருள் துறை வெகு விரைவில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளப்போகிறது.

இத்தனை பாராட்டினாலும், அங்கிருக்கும் சில சில்லரை விஷயத்தில் ஒன்றையாவது சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஒருவித பொறாமை என்றும் கொள்ளலாம். சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கீழே இருப்பதை பார்க்காதீர்கள்.

This is the china gutter cooking oil article with video.


Sam Thiru