Pages

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இந்திய பொருளாதாரம் - நிற்குமா நிலைக்குமா?

இந்திய பொருளாதாரம் - நிற்குமா நிலைக்குமா? 

ஒரு பெரிய சரிவை இந்திய பொருளாதாரம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து இந்தியா மீள எதிர் கட்சிகளும், "Pink" - பொருளாதார தின ஏடுகளும் முன் வைக்கும் யோசனைகள். 
1. பதவி விலகி தேர்தலை சந்தியுங்கள்.
2. இந்த "Populist Measures" - உணவு பாதுகாப்பு", "நில ஆர்ஜித" , "நூறு நாள் வேலை" - போன்ற திட்டங்களை கைவிடுங்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால், எதிர்கட்சிகள், இவை அனைத்திற்கும் (2) எதிராக இருப்பதாக சொல்லவில்லை. இப்போது வேண்டாம் அல்லது எப்படி செயல் படுத்துவது என்பவை போலத்தான். 
இந்த பொருளாதார பிங்க் செய்தி தாள்கள், கொஞ்ச நாள் முன்பு என்ன பேசின என்றால், பொருளாதார சீர்திருத்தங்கள், ஏழைகளுக்கும் பணக்கரர்களுக்குமான இடைவெளியை அதிகமாக்குகின்றன என்றுதான்.
காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு இருக்கும் கோபங்கள், தாபங்கள் ஏராளம். ஆனால், பொருளாதார சீர்திருத்தமும், அதை அடுத்த ஏழைகள் நலத்திட்டங்களும் அதி உன்னதமானவை. இவைகளை செயல் படுத்துவதில் இந்தியாவுக்கே உரித்தான, ஊழல்கள், திறமை இன்மை, இவை அனைத்தையும் மீறி, பொருளாதார வளர்ச்சியினை பகிர்ந்தளிப்பதில் இவை மகத்தான பங்கு ஆற்றியுள்ளன. இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும், இவை முன்னெடுத்து செல்லப்படுமே தவிர, இவற்றை ஒழிக்க முடியாது. இவை மட்டும் இல்லை எனில்,  இன்னும் பத்து வருடங்களில் நாடு தீவிரவாதிகள் கையிலோ அல்லது சர்வாதிகாரத்தி பிடியிலோ சிக்கி சீரழிந்திருக்கும். இந்த கட்டுரை படித்து பாருங்கள்.



http://qz.com/119903/manmohan-singh-is-one-of-the-best-prime-ministers-in-indias-history/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக