Pages

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பாலியல் வன்முறைகள்

பாலியல் வன்முறைகள் - 

கடுமையான சட்டங்கள் தீர்வாகுமா?

நிச்சயம் ஆகாது. இப்போது இருக்கும் சட்டங்களே போதுமானது.இதன் அடிப்படை காரணம் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் தில்லியில் கைதானவன் சொல்கிறான் - அந்த பெண்ணுக்கு பாடம் புகட்ட பண்ணினேன் என்று. நமது கலாசார காவலர்கள் கேட்கிறார்கள் - அந்த பெண் 9 மணிக்கு ஏன் வெளியே போனாள் என்று. தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும், சாதி சங்கம் நடத்திய பேர்வழிகள்   தன் இனப்பெண்களை அறிவிலிகள் அதனால் காதலில் விழுகிறார்கள் என்கிறார்கள்.  
இது அத்தனையிலும் ஒரு அடிப்படை உண்மை இருக்கிறது - அது  ஆண் ஆதிக்க திமிர்த்தனம். அது.. பெண் என்பவள் ஆணை அண்டி அடங்கி இருக்கவேண்டும் அல்லது  பெண்ணுக்கு சுயபுத்தி கிடையாது என ஆழ்  மனதில் பொதிந்து கிடக்கிறது. எந்த பெண்ணும் உடன் படிப்பவனுடன் அல்லது தோழனுடன் வெளியில் போக கூடாது. ஏனெனில் அவள் பெண். அதுவும் இரவில்.. என்ன ஒரு திமிர் இருக்கவேண்டும் அவளுக்கு. இதுதான் அவர்கள் நிலை. பெண் என்பவள் ஆணுக்கு சமமான ஜீவன். அவளால் இவர்கள் செய்வதையும் செய்ய முடியும் அதற்கு மேலும் முடியும். அதை இவர்கள் நினைப்பதே இல்லை. ஆனால் - அம்மாவுக்கும் அன்னைக்கும் பயந்து சாவார்கள். எந்த அன்னை அம்மா தெரிகிறதா?
 
மதுதான் அதன் காரணம் என இன்னொரு அறிவுஜீவி காரணம் சொல்லி நடக்க் க் கிறார். 
ஞான ஒளியே - எத்தனை பேர் மது குடிக்கிறார்கள்  எத்தனை கற்பழிப்புகள் நடந்து இருக்கின்றன இதுபோல்? 

ஆணுக்கு பெண் இங்கு இளைப்பில்லை காண் என்று சொன்ன பாரதி வாழ்ந்த நாடு இது. அது சரி.. பெண் பித்தர்களை பெண் பற்றி பேச அழைக்கும் அதி புத்திசாலி பத்திரிகைகள் இருக்கின்றன இங்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இந்த ஆணாதிக்க குணம் அடிப்படை கல்வியில் இருந்து களையப்பட வேண்டும். 50, 60 களில் அமெரிக்காவில் இருந்த நிற வெறி இன்று துடைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படை காரணம் கற்க தொடங்கியதிலிருந்து எல்லா மனிதர்களும் சமம் என போதிக்க படுகிறது. அந்நிலை போன்று ஆணும் பெண்ணும் சமம் என்பது சிறு வயதில் இருந்து போதிக்கப்பட வேண்டும். அதுபோல் ஜாதீ (தீ) பற்றியும் போதிக்கப்படவேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறையாவது பிழைக்கும்.







 




  

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஒரு பால்வெளி - Hubble Picture

ஒரு பால்வெளி - Hubble Picture

நாச வெளியிட்டுள்ள இந்த படம் ஒரு முழு பால்வெளியை பாருங்கள்.

The NASA/ESA Hubble Space Telescope has spotted the "UFO Galaxy." NGC 2683 is a spiral galaxy seen almost edge-on, giving it the shape of a classic science fiction spaceship. This is why the astronomers at the Astronaut Memorial Planetarium and Observatory, Cocoa, Fla., gave it this attention-grabbing nickname.

திங்கள், 2 ஏப்ரல், 2012

நாங்க அன்னிக்கே சொன்னோமில்ல!

நாங்க அன்னிக்கே சொன்னோமில்ல சகோ!


இப்ப எல்லோரும் என்னாப்பா சொல்றிங்க? உண்மையாத்தான்னு சொன்னீங்களே. நம்பி பட்டாசெல்லாம் வெடிச்சோமேன்னு புலம்பரவங்கள பாத்தா பாவமா இருக்கு. ரொம்ப கொடும - தினமலருக்குத்தான். என்னா பாராட்டுப்பா அம்மாவுக்கு. என்னமோ சசிதான் எல்லாத்தையும் பண்ணமாதிரி. இன்னிக்கி சலம்பலே இல்ல. 
அம்மாகிட்ட வாங்கின ஆப்புன்னா.. சும்மாவா? இது பிரிக்க முடியாத சொந்தம்னு.. அன்னிக்கே சொன்னமே.
http://nivedita-thamil.blogspot.com/2011/12/blog-post.html
சகோதர/சகோதரிகளே இது மறுபடியும் நடக்காதுன்னு மட்டும் நினைக்காதிங்க. ஆனா மறுபடி நடந்தாலும்.. நம்ம தினமலர்.. இப்ப எழுதின மாதிரியேதான் எழுதும்.
இப்ப எந்த போலிஸ் காரனுக்காவது.. கைது பண்ணி வச்சிருக்க சொந்தங்கள தெகிரியமா விசாரிக்க தெம்பு இருக்குன்றீங்க.நிச்சயமா இருக்காது.
அப்போ இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா? திருட்டுன்னாலும் அதுல ஒரு நேர்மை இருக்கணும் இல்லியா? சரியா பங்கு பணத்த அனுப்பலன்னா? இப்ப பாத்தீங்களா? போட்டு (உள்ள) வாங்கிடுவாங்களா இல்லியா? 
 
 
 

திங்கள், 9 ஜனவரி, 2012

நக்கீரனின் தில்(லு) முல்லு

நக்கீரனின்  தில்(லு) முல்லு


எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார். 
இதுல எத்தன விஷமம் இருக்கு பாருங்க. முதல்ல எம்.ஜி.ஆர் சொன்னதாக சொல்லி, பிராமணர்கள், "குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க". பிராமணர்களில் எத்தனை ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தனியார்துறை நிர்வாகிகள் அதுவும் கண்டிப்பான தலைவர் தகுதி உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் - நக்கீரனுக்கு தெரியாதா. இது அப்பட்டமான ஜாதி வெறி தூண்டும் - செயல்.அதிலும் இப்போது, அதை சொல்லும் காரணம், பிராமணர்களை எப்படியாவது ஜெவுக்கு எதிராக திருப்ப முடியுமா என்பதன்றி வேறில்லை.
அடுத்து, மாட்டு கறி தின்னும் மனிதர்களை கேவலப்படுத்துகிறது. உணவுப்பழக்கம் எந்த மனிதனையும், கேவலமாக்காது. அடுத்து மீண்டும், மாட்டுக்கறி கேவலம், அதை பிராமினாக இருந்துகொண்டு ஜெ
சாப்பிடுவது கேவலம் என்று தொனி வர.. அதை ஜெ பெருமையாக சொல்வதாக .. எழுதி இருக்கிறது. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதும் கீழ் தரமான நிலை நக்கீரனுக்கு எதற்கு. அதற்காக.. அவர்களுக்கு எதிரான ஜெ தொண்டர்களின் ரவுடித்தனமும் சரியல்ல.


 

ஒரு கதை ஒரு கருத்து

ஒரு  கதை  ஒரு  கருத்து  

முதலில் கதை 

இதுல வர விஷயம் - அந்த ஓட்டுனர் சொன்னது தப்பே இல்லை. நமக்கெல்லாம் தெரியும், எல்லா தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று. ஆனால் அதை கொல்வதை நாம் தவறாக நினைப்பதில்லை. ஏனெனில் அது நம் உணவு.. அதைதான் பெரியோர்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கின்றனர். உணவுக்காக கொல்வது
 பாவமில்லை. ஆனால் கொல்வதற்காக கொல்வது பாவம்.

ஒரு கோடி - சுரண்டல்

ஒரு கோடி - சுரண்டல்