Pages

சனி, 12 டிசம்பர், 2015

சாதிக்கு வந்த சோதனை வெள்ளம்



சாதிக்கு வந்த சோதனை வெள்ளம் - தீர்த்து வைத்தால் ஒரு பரிசு உங்களுக்கு.


இவனுங்களுக்கு சில பாடங்கள் சொல்லித்தர வேண்டிய நேரம் வந்திருக்குன்னு நினைச்ச தேவதை ஒரு பெருமழையை அனுப்பியது. மாட்டிய மனிதர்களின், நிறங்கள் வெளிப்பட தொடங்க்கியது. சாதி மதங்களை தாண்டி மனித நேயம் பல இடங்களில் வெளிப்பட்டாலும், சாதி வெறி தலை காட்டிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் அது நடந்தது. தேவதை அனுப்பிய வெளிக்கிரக வாசிகளின் மிகப்பெரிய விண்கலம், தமிழகத்தில் இறங்கியது. அவர்களின் குரல் ரேடியோ டிவி இல்லாமல் அனைவருக்கும் கேட்டது.
"ஏ சாதி வெறியர்களே! உங்களின் வெறி பிடித்த பத்து சாதியில் இருந்தும் ஒவ்வொருவரை இங்கு வரிசையாக நிருத்தி இருக்கிறோம். உங்களுக்கு 5 நிமிடம் அவகாசம் தருகிறோம். எப்படி பிழைத்துக்கொள்வது என்னும் யுக்தியை வகுத்துக்கொள்ள. பத்து பேரையும் இந்த படத்தில் உள்ளது போல் நிறுத்துவோம். ஒவ்வொருவருக்கும் கருப்பு அல்லது வெள்ளை நிற கோமாளி தொப்பியை பொருத்துவோம். அது எந்த ஒரு ஒழுங்கு வரிசைக்கிரமுமாக (Order) அது இருக்காது. உதாரணமாக -
இப்படி இருக்கலாம்
கருப்பு கருப்பு வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை கருப்பு வெள்ளை..
கருப்பு கருப்பு
இல்லை இப்படி
கருப்பு கருப்புகருப்பு கருப்புகருப்பு கருப்புகருப்பு கருப்புவெள்ளை வெள்ளை
இல்லை இப்படி
வெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளை
எப்படி வேண்டுமானாலும் அணிவிப்போம்.
பத்தாவது ஆள் அடுத்து இருக்கும் ஒன்பது பேரின் கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
ஒன்பதாவது ஆள் அவன் எதிரில் இருக்கும் எட்டு கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
எட்டவது ஆள் அவன் எதிரில் இருக்கும் ஏழு கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
இப்படி....
பத்தாவது ஆள் அவன் சொந்த தலையில் இருக்கும் கோமாளி தொப்பி நிறத்தை சொல்ல வேண்டும். நிறத்தை மட்டும் ஒரே ஒரு வார்த்தையில் - "கருப்பு" அல்லது "வெள்ளை"  என்று மட்டுமே சொல்ல வேண்டும். மற்றவர்கள் எல்லோருக்கும் அது கேட்கும். பத்தாவது ஆளை மட்டும், தவறாக இருந்தாலும் உடனே கொல்ல மாட்டோம். அனால் அவனை அடுத்து ஒன்பதாவது ஆள் தவறான நிறத்தை சொன்னால் உடனே அவனை கொல்வோம். அதே கதிதான் மற்ற அனைவருக்கும். 
பத்தில் ஒன்பது பேர் சரியாக சொல்லிவிட்டால், உங்கள் சாதிகள் அனைத்தையும் விட்டு விடுவோம். இல்லை எனில் இந்த பத்து சாதி மக்களும் கூண்டோடு அழிக்கப் படுவீர்கள்.
இந்த பத்து பேருக்கும் அவர்கள் உத்தியை வகுத்துக்கொள்ள கொடுக்கப்படும் 5 நிமிடம் இப்போது தொடங்குகிறது.......




உங்களால் இந்த பத்து சாதி மக்களை காப்பாற்ற முடியுமா?
விடை - நாளைக்கு


ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்று பிறந்த தினம். உலகம் பிறந்ததும் இன்றுதான்.(ஜூன் 7 - 4.6 Billion Years ago)

இன்று பிறந்த தினம். - உலகம் பிறந்ததும் இன்றுதான்.(ஜூன் 7 - சும்மா!)
சில நூறு இதயங்கள் வாழ்த்தின. நன்றிகள்.
சென்ற வாரம் டென்னெஸ்ஸி மாகாணத்தின் கிழக்கு பகுதிக்கு மகளை "ETSU"  எனும் மெடிக்கல் university இல் விட சென்றிருந்தோம்.அங்கிருக்கும் அகழ்வாராய்ச்சி நிலையம் பார்த்தோம்.
2000 த்தில், அந்த இடத்தில் சாலைப்பணி நடந்துகொண்டிருந்தபோது,

உங்களுக்கு, தெரியும்.  உலகம் பிறந்து 4.6 billion ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஒரு செல் உயிர் தோன்ற 800 மில்லியன் வருடங்கள் ஆனது. (ஒரு மில்லியன் - 1,000,000 = 10 லட்சம்) பரிணாமம் எடுத்துக்கொண்ட கால அவகாசம் வியக்க வைக்கிறது. 80 கோடி ஆண்டுகள்.


அதன் பிறகு, தாவரம். அவை வர இன்னும் 34 கோடி ஆண்டுகள் ஆனது. மீன்கள் வந்து 56 கோடி ஆண்டுகள்.முதல் ஊர்வன  வந்து 33 கோடி ஆண்டுகள் ஆகின்றன. பூச்சிகளை எவ்வளவு வெறுக்கிறோம்.  உலகத்தில், அனைத்து மக்களையும் ஒரு தராசின் ஒரு பக்கத்த்தில் வைத்து பூச்சிகளை இன்னொன்றில் வைத்தால் அவை மனிதர்களைப்போல் ஏழு மடங்கு அதிகம். உலகம் அவைகளுடையது.



முதல் பறவை இனம்.



இந்த விலங்குகள் அனைத்தும் பூமியை தங்கள் நிரந்தர உறைவிடமாக கொண்டு வளம் வந்தவை. அவைகளின் வினோத உடல் அமைப்பை பார்த்து வியந்தோம். மிகப்பெரிய டைனோசர். இந்த இடத்தில் கிடைத்தது அல்ல.












இவை இங்கு கிடைத்தவை. அதே வகை. ஆனால் சாக பட்சி.








ஏன்  இங்கு டைனோசர்கள் கிடைக்கவில்லை.





பற்கள்.




எலும்புகள்.


இது ஒரு கரடி.


யானைகளின் மூதாதை.



அப்போதிருந்த கரடிகள்.

மனிதன் எப்படி தோன்றினான்? அவன் முதலில் எப்படி இருந்தான்? இப்படித்தான். குரங்குகளை விட கொஞ்சம் தேவலாம்.


பிறகு?
இப்படி.




அவர்கள் லேப்.


அந்த அப்பலாச்சியன் மலை சூழ் நிலம்.


நுழைவாயில் 




இப்படித்தான் ஆய்ந்தார்கள். படத்தில் என் மக்கள்.

டார்வினின் தத்துவம். பலசாலியான, உயிரினங்கள் தங்கள் இனத்தை தொடர்வாழ வைத்துக் கொள்ளவில்லை, புத்திசாலியான உயிரினங்கள் தங்கள் இனத்தை தொடர்வாழ வைத்துக் கொள்ளவில்லை. சூழ் நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே, தங்கள் சந்ததிகளை முன்னோக்கி எடுத்து செல்கின்றன. 


 இவை அனைத்தையும் பார்த்தால், இயற்கை தனது வேலையை செய்துகொண்டிருக்கிறது. அது எந்த உயிரையும், அதன் பிறப்பயும் இறப்பயும், பற்றிய கவலை கொள்வதாக தெரியவில்லை. ஒரு சில பத்தாயிரம் ஆண்டுக்கு முன் வந்த மனிதனை அது பெரிதாக எடுத்துக்கொள்கிறதா என்ன?
பூகம்பங்களும், வெள்ளமும் மழையும் வெய்யிலும் கொன்றுபோடாத மனிதர்களா? . ஆனால் மனிதன்? இவன் வந்ததே சில 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். இவன் கடவுளை படைக்க எடுத்துக்கொண்டது பல ஆயிரம் ஆண்டுகள். அதையும், உருப்படியாக செய்யவில்லை. மனிதன் படைத்த அவனுக்கு குடியிருப்பு கட்ட சக மனிதனை அழிக்க நினைக்கிறவன்  - எத்துணை அளவு முட்டாள். அத்துணை பெரிய டைனோசரை அழித்த இயற்கை, இவனை மதிக்கும் என்றா நினைக்கிறான்?

எதை மாற்றுவது நம் கையில் இருக்கிறதோ அதை முன்னெடுப்போம். உன்னால் கடவுளுக்கு ஒரு வீடு கட்ட முடியும் என்றால் - அவன் சிரிப்பான்- உன் அறிவீனத்தை நினைத்து. நினைப்பது  உலக நலனுக்காக இருக்கட்டும். நாம் படைக்க முடிவது, மனிதம் மட்டுமே. அது பல்லுயிர் ஓம்பல் மட்டுமே. இயற்கையும் இறைவனும் அவர்கள் வேலையை செய்வார்கள். உன் வேலை சக உயிர்களை நேசி. அது போதும்.
54 ஆண்டுகள் = 0.0000000083 பூமி வயது.





























ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாரம் ஒரு விஷயம் அலசலாம் இனி

2015 வாழ்த்துக்கள். 2014 மிக அழுத்தமான ஆண்டாக இருந்தது எனக்கு . இந்த வருடமும் அப்படித்தான். அசாத்திய வேலைப்பளு. இருப்பினும், உங்களுடன் நேரப்பகிர்வு செய்துகொள்ள புத்தாண்டு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். பார்க்கலாம்.  இந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அற்புதமான ஆண்டாக இருந்தது. ஆறு ஆண்டுகளில் ஒபாமாவின் டெமாக்ரடிக் ஆட்சி வேலை இன்மை புள்ளியை 11 % இல் இருந்து 5% ஆக குறைத்திருக்கிறது. இந்த நாட்டில் வேலை இல்லாதவர்கள் என்பவர்கள், தனக்கு வேலை இல்லை என அரசாங்கத்தில் பதிவு செய்து உதவி பெறுபவர்கள். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்பவர்களே. ஒருவர் வேலை இன்றி இருந்தாலும் பதிவு செய்வார்கள். இதை விடுத்து, காலியாக இருக்கும் பணி இடங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இப்போது, இந்திய்ச் நிலையை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
ஷேல் (Shale) எண்ணை உற்பத்தி அதிகரிப்பு பெட்ரோல் விலையை அபரிமிதம்மாக குறைத்திருக்கிறது. இந்தியர்கள் வயிற்றிச்சலை கொட்டிக்கொள்ள - ஒரு கேலன் இங்கு 1.75$ (ஒரு லிட்டர் 29 ரூபாய்). மென்பொருள் துறையில் மீண்டும் இந்தியர்கள் வருகை அதிகரிக்கும் சூழல் உருவாகிறது.
இருக்குமிடம் நன்கிருந்தாலும், பிறந்த நாட்டின் நிலை கவலை கொள்ள வைக்கிறது. 56" ஆட்சி அமைத்துவிட்டார். காவிகளின் கொட்டம் ஆரம்பித்து விட்டது. சாதி மோதலில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழகத்தை மத மோதலுக்கும் தயாராக்குவதாக தோன்றுகிறது. விழித்திருங்கள். பெருமாள் முருகனின் நாவல் எரிப்பு மிகுந்த மனவலி. தமிழக முன்னாள் முதல்வருக்கு தரப்பட்ட தீர்ப்பு அரசை செயல்படாமல் செய்திருப்பது வருத்தப்பட வைக்கிறது.  இனி வாரம் ஒரு விஷயம் அலசலாம் இனி.