Pages

புதன், 16 நவம்பர், 2011

ஆறு மாதத்தில் அம்மாவின் சாதனை.

ஆறு மாதத்தில் அம்மாவின் சாதனை.
என்னத்த சொல்றது.அடுத்த தடவ யார் வேணுமின்னாலும் வரலாம் ஆனா - நாம மட்டும் இன்னொரு வாட்டி ஜெயிக்கவே கூடாதுன்னு - கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பாக்குறாங்க அம்மா.முதல்ல சட்ட சபை வளாகம் பத்தின முடிவை எடுத்ததும் -- சொம்பு தூக்கிகள் கொஞ்சம் கலவரம் ஆனாலும் அது அம்மாவோட தனி திறமை. அவங்க முன்னாடி மாத்த முடிவு எடுத்தப்போ அய்யா ஆளுங்க விடலை இல்லையா அதுக்கு பதிலடிதான். அப்படின்னு கொஞ்சம் தூக்கலாவே சத்தம் போட்டு சரி பண்ணாங்க. 
அம்மான்னா சும்மாவா. அடுத்து பள்ளிக்கூட பசங்கள மூணு மாசம் படிக்க விடாம பம்பரம் விடவச்சி - நிறைய சட்டம் படிச்ச ஜட்சுங்களுக்கு (கே) வேலை கொடுத்தாங்க. நம்ம சொம்பு தூக்கிகள் அசரலையே. கருணாநிதி கவிதைதான் அதுல இருக்கு அதான் அம்மா இப்படி பண்ணாங்கன்னு ஒரே அடி. கடைசியில ஜட்ஜுங்க அம்மா கொடுத்த வேலைய திறமையா செஞ்சி -- ஒரு ஆப்பு தந்தாங்க - நீங்களே இனிமே பத்துக்குங்கன்னு. சொம்புங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் அத மறந்துட்டு அம்மா ஆடு கொடுக்கறாங்கன்னு மாடு  கொடுக்கறாங்கன்னு அகமகிழ்தாங்க. பத்தகத்த புடுங்கிட்டு பம்பரம் கொடுத்தாலும் குஷிதான் ஆடு மாடு கொடுத்தாலும் குஷிதான். நல்ல மக்களப்பா.
என்ன பண்ணா இந்த சொம்புங்க சும்மா இருக்கும்? அடிச்சாங்க ஒரு அடி.. துப்பாக்கிய தூக்கி.. ஏழு பேர் காலி. மாசத்துக்கு இரண்டு பேர தூக்கறது தனி கணக்கு. சொம்புங்க அப்பாவும் அசரலியே. அது கலவரத்த அம்மா அடக்கற முறை. உடுங்கடான்னிட்டான்களே. 
இந்த குடிசை பகுதியில இருந்து மத்த ஜனங்களோட போய் ஒரு நூலகத்துல புத்தகம் எல்லாம் படிக்கிறார்களாம் - பாத்தாங்க - ஆடு மாடு எல்லாம் கொடுத்தா அத்தையெல்லாம் மேய்க்கறத உட்டுட்டு படிக்கவா போறேன்னு எடுத்தாங்க சாட்டைய. மாத்துறேன் அத்தைய. மறுபடியும் இந்த ஜட்சுங்களுக்குதான் வேலை. சொம்புங்க சும்மாவா? அது ஏன் தெரியுமா? அந்த எடத்துல அம்மா சட்ட சபா கட்டுறதா இருந்தாங்க. அதனாலதான்.. அப்படின்னு.. ஒருபக்கம்.. இன்டர்நெட்டுல இல்லாததான்னு அறிவு கொழுந்துங்க ஒரு பக்கம்னு.. அடி பின்னிட்டாங்க இல்ல.
அடுத்து அம்மா பண்ணதுதான் டாப்பு. இண்டர்நெட்டுல இந்த அளவுக்கு நம்மள தாங்குறாங்களே.. இவங்களுக்கு எதுனா பண்ணனும்னு நினைச்சாங்க பாருங்க. எலிட் பார் ஆரம்பிச்சாங்க... அதான் சூப்பரு. சொம்புங்கள கிண்டல் அடிக்கிற எனக்கு கூட புடிச்சிருக்குப்பா இது. சாரு என்னமா வருவேத்து எழுதி இருக்காரு பாத்தியளா? பின்ன ஏன்னா .. இந்த ஊர்ல ஜானி வாக்கர் சாப்பிட்டு போட்டு அங்க போய் கண்ட கருமத்தையும் குடிச்சா ஒடம்புக்கு ஒத்துக்குதா.. சனியன்.. இனிமே தொல்லை இல்ல. சொம்ப கொஞ்சம் அழுத்தியே அடிக்கலாம்.
இந்த மக்கள் நலப்பணி செய்யறேன்னு ஒரு கும்பலுக்கு வேலை கொடுத்தாராம் அய்யா. அப்படின்னா அவனுங்க அவர் ஆளாத்தான் இருக்கணும். முன்னியே தூக்கின மாதிரி தூக்குன்னு சொல்லிட்டாங்க. அதுக்கும் அசரலியே.. அவனுங்க ஏன்னா வேலை செஞ்சி கிளிச்சானுங்கன்னு அப்படின்னு கேட்டு. அதையும் நியாயம்னு சொல்லிட்டாங்களே. அடுத்து இதே மாதிரி... இன்னும் நிறைய கும்பல் அரசாங்கத்துல இருக்காம்.. சாலைப்பணி.. அப்படி இப்படின்னு. அவங்களுக்கும் ஆப்பு கூடிய சீக்கிரம் இருக்கு. சொம்புங்களா .. இப்பவே காரணம் யோசிச்சு வச்சுக்குங்க. உதவும்.
நாம என்னா பண்ணாலும்  தாங்கரான்களேன்னு புல்லரிச்சு அம்மா அடுத்து பண்ணதுதான் நெறைய சொம்புங்கள யோசிக்க வச்சிருக்கு. ஆடு மாட கொடுத்த புண்ணியவதி பால் வேலைய ஏத்திட்டாங்க. தடையில்லா  மின்சாரம் தாரேன்ன மகராசி - மின் கட்டணத்த  ஏத்திட்டாங்க. பல கட்டனத்துல பஸ் விட்டு மக்களை ஏமாத்தராங்கன்னு சொன்ன புத்திசாலி இப்ப எல்லா கட்டணத்தையும் ஏத்திட்டாங்க.
பஸ் பாஸ் உட்பட. 
 சொம்புங்களா.. உடாதீங்க. இதையும் ஆதரியுங்க. அப்பத்தான் அம்மாவோட நெனப்பு நிறைவேறும்.