அப்படியா?
கலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கை படிச்சீங்களா?
கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆஹா! என்னவொரு அற்புதமான வாதம். லாபம் நட்டம் மட்டும் நிறுவன சொந்தக்காரர்களுக்காம். தினப்படி நிர்வாக வேலைகளுக்கு அவர்கள் பொறுப்பு இல்லையாம். நாலு மாடு வச்சிருந்தா கூட - வேலைக்காரன் சரியா புள்ள போட்டானா தண்ணி காட்டினான்னான்னு - சொந்தக்காரன் பார்ப்பானா இல்லையா? இரண்டு கோடி கொடுத்து சொந்தக்காரனாயிட்டு - இருநூறு கோடி வியாபாரம் ஆகும்போது - நியாயமான சொந்தக்காரன் - ஒண்ணு தப்ப கண்டுபிடிச்சிருக்கணும் - இல்ல பங்கு வாங்கி இருக்கணும்.
இதுல வேடிக்கை என்னன்னா - சட்டம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்னு சொல்லுது - வாங்கின அரசியல் வாதிங்க இடைத்தரகர்கள் - அதில் சிபேர் மட்டும் - பிடிக்கப் படுகிறார்கள். ஆனா .. இதுக்கெல்லாம் சூத்திரதாரியா - வழி நடத்தின - நீரா டாடா அம்பானி வகையறாக்கள்.. எங்கப்பா? அவங்க வந்தா தானே - மத்தவங்களுக்கு எவ்வளவு குடுத்தாங்கன்னு தெரியும்!