Pages

வெள்ளி, 1 ஜூலை, 2011

இது என்ன விளையாட்டு?

இது என்ன விளையாட்டு?
தீராத விளையாட்டு பிள்ளை என்று கண்ணனை பாடி கேட்டிருப்பீர்கள். அலகிலா விளையாட்டுடையவன் என ஈசனை பாடி கேட்டிருப்பீர்கள். இது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விளையாட்டாக தெரிகிறது. அதாவது இப்போது இந்திய அரசு... காங்கிரஸ் கட்சியின் அரசு விளையாடும் விளையாட்டு. இவங்களுக்கு எதிர்ல விளையாடரவுங்க - நிறைய பேர் இருந்தாலும். ஒரு நாலு டீம்தான் - த்ரில்லிங்கா இருக்கு.
முதலில் திமுகவுடன் நடக்கும் விளையாட்டை பார்ப்போம். 
முதல் ரவுண்டு. 
இது தேர்தல் ஏற்பாடுகளுக்கு முன்னாடியே ஆரம்பித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவாதம் ஆரம்பம் ஆனவுடன் தொடங்கியது. தெரியாமல்தான் கேட்கிறேன்... நடக்கும் ஊழல்களில் பங்கு தராமல் நடக்கும் ஊழல் ஏதாவது இருக்கிறதா? சாதாரணமாக, பதிவாளர் அலுகம், வாகன உரிமம் வழங்கும் துறை... அது என்ன துறை ஆனாலும்.. அங்கு நடைபெறும் அத்தனை வஸூலும், அடிமட்ட பியூநில் இருந்து, அந்த துறை அமைச்சர் வரை அவர்களின் பதவிக்கேற்ப பகிர்ந்து கொள்ளப்படுவது இந்த ஜன நாயக நாட்டில் அனைத்து மன்னர்களும் அறிந்ததுதானே?  இதில் நிதித்  துறையில் இருந்த சிதம்பரம் பங்கும் இருக்கிறது என ஆதாரம் காட்ட சுப்பிரமணிய சாமி வேண்டுமா? இல்லை சோனியாவுக்கும் பங்கு கிடைத்திருக்கிறது அது மக்காவ் வங்கியில் இருக்கிறது என தெரிவிக்கவாவது அவர் வேண்டுமா? நிச்சயம் இந்த பணம் எல்லோராலும் பிரித்து மேயப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன்.. கலைஞரே சொன்னாரே! அத்தனை பணத்தை ஒரு ஆள் லட்ட முடியுமான்னு. சரி பங்கு எல்லாம் போயிருக்குன்னு சொன்னா.. எதுக்கு ஒரு சிலரை மட்டும் உள்ள வைக்கிறாங்க. நெஜமாவே நீதித்துறை, சிபிஐ எல்லாம் அவ்வளவு தீர்மானமா இருக்கா? அதில் எல்லாம் இந்த அழுகின தக்காளிகளின் தாக்கம் இல்லையா? இங்குதான் நமக்கு சிந்தனைக்கு வேலை. நிச்சயமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலும் தருகிறார்கள். அதே நேரம் இந்த அழுகல்களை பாதுகாக்கும் அல்லக்கைகளும் அங்கு இருக்கின்றன.நல்லவர்களிலும் - நமக்கேன் வம்பு - ரகமும் இருக்கும்.
அவைகளுக்கு இடையேயான சட்டரீதியான தற்காப்பு யுத்தம்தான் இங்கு நடப்பது.
அதற்கெல்லாம் மேலும் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதுவும் கற்பனைக்கெட்டாத விஷயமாக படவில்லை. பங்கு பிரிப்பதில் நியாயமாக நடக்கவில்லை என ஒரு பெரிய சக்தி நினைத்திருக்கிறது. அதை நிருபிக்கவும் வழி இல்லை. அதனால் ஒருவிதமான பழி வாங்கும் செயலாகவும் இதுதோன்றுகிறது. அதை எதிர்த்து கேட்க வேண்டுமானால் - ஒன்று அனைத்தையும் கொடுக்க வேண்டும் அல்லது நான் சரியாக நடந்தேன் எதற்கு என்னை தண்டிக்கிறீர்கள் என நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதை நம்பிவிட்டால் - கொஞ்சம் தண்டனை - ஆனால் அடித்தது மிஞ்சும். அதுதான் நடப்பதாக தோன்றுகிறது.
இரண்டாவது ரவுண்டு..
இது எலக்ஷன் ஆரம்பித்ததும்...
இந்த டீம் நிச்சயம் எப்படியாவது ஜெயிச்சுடும். அதனால அவங்க கூட இருக்கணும் அதிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடம் வாங்கிடனும். அதுக்கு ஏத்த மாதிரி அவங்க பேரெல்லாம் 2G இல மாட்டி இருக்கு. அத சாதகமா உபயோகப் படுத்திக்க வேணும். இப்படியெல்லாம் திட்டம் போட்டு 63 சீட்டு வாங்கிய பின்னர், தலைவரால் நாயன்மார்கள் மாதிரி எல்லாரும் இருங்க... அப்பவும் நக்கல் பாத்தீங்களா!... என சொல்லத்தான் முடிந்தது. அவங்கெல்லாம் நாயன்மாருங்க இவர் சிவபெருமான். 
இதில் இன்னொரு விதமாகவும் இருக்கலாம் என அமுதவன் எழுதி இருந்தார். 
அது..
"தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது."
அவரின் முழு கட்டுரை படிக்க...
http://amudhavan.blogspot.com/2011/05/blog-post.html 
வேடிக்கை என்னவென்றால்.. அவர்கள் நினைத்தது இரண்டுமே நடக்கவில்லை. ஜெயிக்கவும் இல்லை. திமுகவுக்கு இணையாக சீட்டுக்களை அள்ளவும் முடியவில்லை.
ராகுலுக்கு கிடைத்த ஜோக்கர்கள் அறிவுரை அப்படி.
அடுத்து என்ன நடக்கும்?
இன்னும் கொஞ்ச நாளில் சிபி ஐ - வேகத்தை குறைக்கும். ஹர்ஷத் மேத்தாவை மறந்தது போல் நாமும் இதை மறந்து விடுவோம். தியாகி ராசாவும், கனியும் பெரும் வெற்றி பெற்று.. ஸமூகத்திற்கு மறுபடியும் தொண்டு ஆற்றுவார்கள்.

இரண்டாவது விளையாட்டு.. 
இது சமூக ஆர்வலர்களுடன்... கூடிய விரைவில் விவாதிப்போம்.




























 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக