2010 - நடந்தது நடந்துபோச்சின்னு விட்டுட முடியுங்களா?
சினிமா - அடாவடி வியாபாரம் - பொய் விளம்பரங்கள் - அதிகார துஷ்பிரயோகம்
இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாதவங்களே இல்லை .. பேசாதவங்களே இல்லைன்னு சொல்லலாம். அப்படி என்னதான் பேச(த்த)னாங்கன்னு பாக்கலாம்.
முதலில் தயாரிப்பு மற்றும் விளம்பரங்கள் பற்றி - எழுதி கிழிக்காதவர்களே இல்லை. சன் டிவியில போட்டு விளம்பரமா தாக்கினார்களாம். தினகரன்ல விளம்பரமா வருதாம். அதெல்லாம் சரி - ஏனுங்கோ அந்த டிவியத்தான் பாப்பேன் அந்த பேப்பரைத்தான் வாங்குவேன்னு ஒத்த கால்ல நிக்கறீங்க? அப்புறம் ஐயோ விளம்பரம் வருதேன்னு அழுவறீங்க. தேசம் விட்டு வந்தாலும் - டிஷ்ல பாக்கறீங்களே அப்பு - அப்ப அவன் காட்டார அல்லாத்தையும்தான் பாக்கோணும்.
அந்த ச(ன்)னியனை எல்லாம் உட்டவுங்க யாரும் இந்த அளவு பேத்தமாட்டாங்க.
டிக்கட்டு விலை - என்னவா இருந்தாலும் கொடுத்துட்டு அப்புறம் எதுக்கு புலம்பல்? அந்த அட்டு படத்த நானும் ஆயிரம் கொடுத்து பாத்தேன்னு. பொறுமையா போயிருக்கலாமில்ல. படம் எடுத்த இவனுங்க எம்படம் நல்லா இல்லா போயி கண்டிப்பா பாருங்கன்னா சொல்வான்?
அத்த உடுங்க, சோப்புல இருந்து பைக்கு கார்னு எத்தன விளம்பரம் வருது?
அதுக்கெல்லாம் உடனே காசு கொடுத்துடரிங்களா? இல்லை இல்ல? ரஜினி ஐஸ் - பாக்க தானே போனீங்க?
பாத்துட்டு அப்புறம் எதுக்குங்க?
அடுத்து எதிர்மறை விமர்சனங்களில் சில. கதை இல்லையாம்! இல்லையா .. அல்லது .. உங்களுக்கு புரியலையா? புரியலைன்னுதான் நினைக்கிறேன். அபத்தமான சில கேள்விகளுக்கு பதில் சொன்னோம்னா புரியுமா?
ரோபோ வேகமா சார்ஜ் ஏத்திக்குதாம் - இப்ப இருக்கிற டெக்னாலஜி ல அது சாத்தியம் இல்லையாம். ஆஹா! மத்த டெக்னாலஜி எல்லாம் இருக்குதாங்க? அதான் சண்டை போடறது பாட்டு பாடறது, லவ் பண்றது எல்லாம்?
மிஷ்கின்னோட வேகமா சண்டை போடுற கேப்புல - இந்த படத்த ஒரு அடி அடிக்கிறாருங்க சாரு!
சாரு,
தமிழர்களை ஷங்கர் மாட்டு சாணி திங்கவைத்த காட்சிகள்…
http://www.youtube.com/watch?v=8NGh9MewnyY&feature=player_embeddedஇப்படி ஒரு லிங்க் கொடுத்து. இதுல வேடிக்கை என்னன்னா - இந்த காண் ஒளியில் இருக்கும் அத்தனை படமும் ஒன்னு மாதியே இருக்கு. ஏனுங்க Ms.Doubt Fire ல இருந்து I Robot கரு வந்துச்சி இல்ல பைசெண்டினியல் மென் - அதுக்கு முன்ன வந்தத கொஞ்சம் improvise பண்ணி எடுத்திருக்கான்னு சொல்ல மாட்டேங்கிறிங்க? ஏன்னா அது வெள்ளக்காரனது?
Inception எத்தன அமெரிக்கன் பாத்திருப்பன்னு நினைக்கறீங்க? 1 சதம் தானுங்க. அது ஒரு 21 மில்லியன் தந்திருக்கும். அது போதுமா? நிச்சயமா இல்ல. அந்த படம் உலகம் மொத்தம் இருக்கும் ஒரு சதம் மக்களுக்காக எடுத்தது. அதனால அது வியாபார சாத்தியமாச்சி. அது மாதிரி இந்திரன எடுத்து தமிழ் தெலுங்கு இந்தி ரசிகர் பட்டாளத்த நம்பினா? ஒரு சதம் இல்ல - 0.0001 சதம் மக்கள் கூட பாக்க மாட்டாங்க. அதனாலதான் கொஞ்சம் சாதா சிந்தனையும் கொஞ்சம் ரஜனியும் கலந்து வச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் புத்திசாலித்தனத்த ஒதுக்கி வச்சிட்டு பாக்கத்தான் இந்த படம் (புத்திசாலிகளை பொறுத்தவரை).ஏன்னா நம்ம மக்கள்ல - ஒரு சதத்துக்கும் குறைஞ்சவங்கதான் அதீத கலை ரசனையோட இருக்காங்க.
இன்னிக்கி - இதன் வியாபார நுணுக்கம் - MBA ல பாடமா வச்சிருக்கவன் முட்டாளா?
கொசுவோட பேசினத எத்தனை குழந்தைங்க ரசிச்சது தெரியுமா?
60 - 37 வயசுன்னு எழுதறிங்களே - அவங்களோட ஒரு நளினமாவது இப்ப இருக்க - 25 - 20 வயசுங்களுக்கு இருக்கா? காதல் அணுக்கள் பாட்டுல - ஐஸ் ஆட்டத்துல ஒரு சதமாவது இப்ப இருக்க எவளாவது பண்ணி இருக்காளா?
ரெண்டு பேத்தையும் - +2 படிக்கிறாங்கன்னு காட்டலியே! சந்தோஷப்பட்டுக்கோங்க.
எல்லாத்தையும் பாத்துட்டு எம் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா -
"Daddy - he should have made one more Robot like Aiyshvaryaa and given to the Rajini Robot - the problem would have been solved. I do not know why a scientist cannot think of it".
எனக்கு தலை கொஞ்சம் சுத்திச்சி!
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
பதிலளிநீக்குThank you Prabhakaran.
பதிலளிநீக்கு