Pages

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

இன மானம்

இது எனக்கு ஒரு பெரிய தலவலிங்க. எல்லோரும் இதப்பத்தி பேசுறாங்க. தனக்கு எவ்வளவு இருக்கு மத்தவங்களுக்கு எவ்வளவு இருக்கு - அதாவது இனமானம். எது அதிகம்னு. ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு எதிர் வாதம். நீ ஏன் மத்திய அரசை நிர்பந்திக்கலை? உன் பையனை நீ ஏன் ராஜினமா பண்ண சொல்லலை? அப்போ இப்பிடி சொன்ன இப்ப மாத்தி பேசற. அது போன மாசம் இது இப்ப இருக்கிற நிலைமை வேற. தலசுத்துதா இல்லையா?
இதுக்கெல்லாம் மேல - இணையதளத்துல எழுதறவுங்க. கருணாநிதிய திட்டறியே நீ ஏன் வன்னிய விட்டிட்டு கனடா போனே? அங்கியே இருந்து சண்டை போட வேண்டியதுதானே?
இதுல யாராவது உண்மை பேசுறாங்களா?
எதுதான் உண்மையாக இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் கடமைகள் இருக்கு. அதில் இது எனக்கு பிரதானம் இது அடுத்தது என வகைப்படுத்தி வைக்கிறார்கள். தாயின் ஈமைக் கடனை விட இலக்கிய விவாதம் முதன்மையாக தெரிந்தது ஒரு இலக்கிய வாதிக்கு. தனது உயிரைவிட தனது கப்பலில் வேலை செய்வோர் முக்கியமாக பட்டது ஒரு அமெரிக்கனுக்கு - சில தினங்களுக்கு முன்பு. கலர் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கு அவர்களுக்கு பிடித்த கலர் மட்டும் நியாயமாக தெரிகிறது.
எனது மகன் - அதனால் தவறு தவறல்ல என்பவர்களும் இருக்கிறார்கள். மகனே ஆனாலும் தவறு தவறுதான் என்பவர்களும் இருக்கிறார்கள்.
கனடாவுக்கோ ஐரோப்பாவிற்கோ ஓடிப்போனவர்கள் நாட்டு பற்று இல்லாதவர்களா? ஒட்டு மொத்த தமிழினத்தை காக்க என்னால் முடியாது - எனது உறவை மட்டுமாவது காப்பற்ற முடியுமா? என்று இயலாமையில் மனம் துடித்து பிரிந்தவர்கள் அல்லவா அவர்கள்?
முரண்பாடு இல்லாத கூட்டணி இருக்கிறதா? இல்லை முரண்பாடு இல்லா வாழ்க்கைதான் இருக்கிறதா?
கொட்டி கிடக்கும் எல்லா உணர்ச்சிகளையும் வகைப்படுத்தி வழிப்படுத்துவதுதான் வாழ்க்கை. உண்மை பேசினால் ஒழிய - அதாவது இந்த சூழ்நிலைக்கு இந்த முடிவுதான் எனக்கு சரியாக பட்டது என்று - இவர்கள் நினைப்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக