2015 வாழ்த்துக்கள். 2014 மிக அழுத்தமான ஆண்டாக இருந்தது எனக்கு . இந்த வருடமும் அப்படித்தான். அசாத்திய வேலைப்பளு. இருப்பினும், உங்களுடன் நேரப்பகிர்வு செய்துகொள்ள புத்தாண்டு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். பார்க்கலாம். இந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அற்புதமான ஆண்டாக இருந்தது. ஆறு ஆண்டுகளில் ஒபாமாவின் டெமாக்ரடிக் ஆட்சி வேலை இன்மை புள்ளியை 11 % இல் இருந்து 5% ஆக குறைத்திருக்கிறது. இந்த நாட்டில் வேலை இல்லாதவர்கள் என்பவர்கள், தனக்கு வேலை இல்லை என அரசாங்கத்தில் பதிவு செய்து உதவி பெறுபவர்கள். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்பவர்களே. ஒருவர் வேலை இன்றி இருந்தாலும் பதிவு செய்வார்கள். இதை விடுத்து, காலியாக இருக்கும் பணி இடங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இப்போது, இந்திய்ச் நிலையை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
ஷேல் (Shale) எண்ணை உற்பத்தி அதிகரிப்பு பெட்ரோல் விலையை அபரிமிதம்மாக குறைத்திருக்கிறது. இந்தியர்கள் வயிற்றிச்சலை கொட்டிக்கொள்ள - ஒரு கேலன் இங்கு 1.75$ (ஒரு லிட்டர் 29 ரூபாய்). மென்பொருள் துறையில் மீண்டும் இந்தியர்கள் வருகை அதிகரிக்கும் சூழல் உருவாகிறது.
இருக்குமிடம் நன்கிருந்தாலும், பிறந்த நாட்டின் நிலை கவலை கொள்ள வைக்கிறது. 56" ஆட்சி அமைத்துவிட்டார். காவிகளின் கொட்டம் ஆரம்பித்து விட்டது. சாதி மோதலில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழகத்தை மத மோதலுக்கும் தயாராக்குவதாக தோன்றுகிறது. விழித்திருங்கள். பெருமாள் முருகனின் நாவல் எரிப்பு மிகுந்த மனவலி. தமிழக முன்னாள் முதல்வருக்கு தரப்பட்ட தீர்ப்பு அரசை செயல்படாமல் செய்திருப்பது வருத்தப்பட வைக்கிறது. இனி வாரம் ஒரு விஷயம் அலசலாம் இனி.